Advertisment

மீண்டும் போலீஸாக ‘தல’ அஜித்! இயக்குநர் இவர் தான்...

அஜித்தை வைத்து மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார் போனி கபூர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy birthday ajith, thala ajith birthday

Happy birthday ajith, thala ajith birthday

இயக்குநர் சிவாவின் ’விஸ்வாசம்’ படத்தில் தூக்குதுரையாக நடித்து மாஸ் காட்டிய அஜித், அதன் பிறகு ‘நேர்க்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் கமிட்டானார்.

Advertisment

இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்காக இது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன்’ ஆகியப் படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார்.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இதனைத் தயாரிக்கிறார்.

’நேர்க்கொண்ட பார்வை’யில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து அஜித்தை வைத்து மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார் போனி கபூர். இதையும் வினோத்தே இயக்குகிறார்.

இந்தப் படத்திற்காக தன் உடல் எடையைக் குறைக்கிறாராம் அஜித். ஆக, இது ஒரு போலீஸ் கதையாக இருக்கலாம் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.

மேலும் இதற்கு முன் போலீஸ் களத்தில் உருவான தீரன் படத்தை சிறப்பாக இயக்கியிருந்த வினோத், அஜித்தின் அடுத்தப்படத்தில் இன்னும் மெனக்கெட இருக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

 

Tamil Cinema Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment