Advertisment

படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் : நடிகர் அஜித்தின் அன்ஸீன் வீடியோ

பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள துணிவு படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

author-image
WebDesk
New Update
தயாளனாக சமுத்திரக்கனி... முத்தழகனாக ஜி.எம்.சுந்தர்... துணிவு கதாபாத்திரங்கள் அறிமுகம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் படப்பிடிப்பின்போது படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களின் ஒருவரான அஜித், சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவில் சாதித்த முன்னிண நடிகர்களின் ஒருவராக உள்ளார். தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அஜித், வலிமை படத்திற்கு பிறகு துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் எச்.வினோத், போனி கபூர் ஆகிய மூவரும் 3-வது முறையாக இணைந்துள்ள துணிவு படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும், உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள துணிவு படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படம் குறித்து நாள்தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அஜித் குறித்து பழைய வீடியோ மற்றும் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படப்பிடிப்பின்போது, அஜித் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அஜித் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த வேதாளம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு ரூ 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது.

மேலும் தனது படத்தின் ப்ரமோஷன் மட்டுமல்லாது வெளியில் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நடிகர் அஜித் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் ஜாலியாக இருப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment