Advertisment

30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் பாக்யராஜூவுடன் இணையும் ஐஸ்வர்யா... வைரல் புகைப்படம்

Tamil Cinema Update : பன்முக திறமைகொண்ட பாக்யராஜ், பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் நாயகனாவும் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் பாக்யராஜூவுடன் இணையும் ஐஸ்வர்யா... வைரல் புகைப்படம்

Tamil Cinema Update : இந்திய சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ். திரைக்கதை மட்டுமல்லாமல் இயக்கம் நடிப்பு, தயாரிப்பு என பன்முக திறமைகொண்ட இவர், பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் நாயகனாவும் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

Advertisment

அந்த வகையில் கடந்த 1992-ம் ஆண்டு இவர் இயக்கி நடித்த படம் ராசுக்குட்டி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான இந்த படத்தில் பாக்யராஜூக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்த பாக்யராஜ் ஐஸ்வர்யவவுடன் ஜோடி சேராத நிலையில், தற்போது 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஐஸ்வர்யாவுடன் பாக்யராஜ் இணைந்து நடிக்க உள்ளார். பிக்பாஸ் கவின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது பெற்றோராக பாக்யராஜ் – ஐஸ்வர்யா நடிக்க உள்ளனர்.

publive-image

மேலும் இவர்கள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாடடில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

கே.பாபு என்பவர் இயக்கும் இந்த படத்தை ஒவிம்பிய மூவிஸ் தயாரிக்க உள்ளது. இதில் 30 வருடங்களுக்கு பிறகு பாக்யராஜ் – ஐஸ்வர்யா ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamil Cinema Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment