விஜய்யை நான் இன்னும் குழந்தையாகவே நினைத்துக்கொண்டிருப்பதால் தான் பிரச்னை என்று நினைப்பாதாக அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மனம் திறந்து பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
80 – 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் ரஜினியை வைத்து இயக்கிய நான் சிகப்பு மனிதன் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக யார் இந்த எஸ்.ஏ.சி. என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் தனது இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் எஸ்.ஏ.சி தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி சரவணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தை ப்ரமோஷன் செய்யும் விதமாக இந்தியா க்ளிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பதம். அவருக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு அவர் தளபதியாக மாறியிருக்கலாம். ஆனால் அவர் எனக்கு இன்னும் குழந்தைதான். சிறுவயதில் அவன் ஹோம்வொர்க் செய்யவில்லை என்றால் ஸ்கேல் வைத்து தொடையில் அடிப்பேன். அப்படியே சிவந்துவிடும். உடனே தேங்காய் எண்ணெய் எடுத்து வந்து நானே தேய்த்துவிடுவேன்.
அதே மாதிரி தான் இப்போதும் நான் பார்க்கிறேன். அவரை இப்போதும் குழந்தையாக நினைப்பதுதான் இதற்கு காரணமாக இருக்கலாம். உங்க பாயிண்ட்ல சொல்லனும்னா, அவரை இன்னும் குழந்தையாக நினைப்பது என்னோட தவறாக கூட இருக்கலாம். ஆனால் நான் முதலில் நேசிப்பது சினிமாவைதான். அதன்பிறகு விஜய் அடுத்துதான் என் மனைவி ஷோபா. கடவுள் இரண்டு பிள்ளைகளை கொடுத்து ஒருவரை எடுத்துக்கொண்டார். அதனால் எனக்கு ஒரு பிள்ளைதான் என்று ஆகிவிட்டது.
அதனால் மொத்த காதலையும் அவர் ஒருவர் மீதுதான் வைக்க முடியும். நான் விஜய் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை. அதேபோல் விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்வுடன் அவரை அறிமுகபப்டுத்த நாளைய தீர்ப்பு என்ற படத்தின் கதையை எழுதினேன். அந்த படத்தில் நடித்து முடித்தவுடன், நான் ஷோபாவிடம் சொன்னேன். இந்த படம் வெற்றியாகுதோ இல்லையோ உன் பிள்ளை பெரிய ஹிரோவாகிவிடுவான் என்று சொன்னேன்.
அதேபோல், படத்தின் முதல் ஷாட் ராதா ரவி ஸ்ரீவித்யாவுக்கு இடையில் விஜய் டைலாக் பேச வேண்டும். அதை ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அப்போது ராதாரவி இவன் பெரிய ஆளாக வருவான் என்று சொன்னார். அவர் சொன்னபடியே இப்போது நடந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த பேட்டியை வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“