Advertisment

காதல், காமெடி ஜீவாவுக்கு கை கொடுத்ததா? வரலாறு முக்கியம் விமர்சனம்

எப்போதுமே பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் "ஜீவா"வின் தோற்றம் இக்கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
காதல், காமெடி ஜீவாவுக்கு கை கொடுத்ததா? வரலாறு முக்கியம் விமர்சனம்

வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி கொண்டிருக்கும் நாயகன்(ஜீவா) முதலில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய, பின் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவருடைய இந்த காதலாவது வெற்றி பெற்றதா இல்லையா? என்பதை  நகைச்சுவை,ரொமான்ஸ் கலந்து சொல்லியிருக்கும் படமே "வரலாறு முக்கியம்".

Advertisment

எப்போதுமே பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் "ஜீவா"வின் தோற்றம் இக்கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. அவருடைய இயல்பான நடிப்பின் மூலம் காதலிலும், காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.நாயகியாக வரும் கஷ்மிராவிற்கு ஒரு நல்ல ரோல் அதை கச்சிதமாகவும், ரசிக்கும் படியாகவும் செய்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு படத்திற்கு தேவையான அளவு அமைந்திருப்பது சிறப்பு. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வி.டி.வி கணேஷிற்கு ஒரு தரமான கதாபாத்திரம், நகைச்சுவை கலந்து அதை ரசிக்கும் படியாக செய்து அசத்தியிருக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடைய கலகலப்பான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஜிமிக்கி கம்மல் பாடல் புகழ் "ஷான் ரஹ்மானி"ன் பாடல்கள் சுமார் என்றாலும், புத்துணர்ச்சியான பின்னணி இசை பல காட்சிகளை ரசிக்க வைக்கிறது.தமிழ் ரசிகர்கள் நிறைய பார்த்து சலித்த கதை என்றாலும் கூட,ஒரு நல்ல கமர்சியல் படத்திற்கான திரைக்கதையை அமைத்து அதில் காமெடி கலந்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன். படத்தின் நீளம் படத்திற்கு சற்று தடையாக அமைந்திருக்கிறது.

மேலும் சில 18+ வசனங்களை தவிர்த்திருந்தால் குடும்பங்கள் ரசிக்கும் ஒரு படமாக இது அமைந்திருக்கும். மொத்தத்தில் சில ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும், ஜாலியாக ரசிக்கும் ஒரு சாதாரண பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமைந்திருக்கிறது வரலாறு முக்கியம்.

நவீன்குமார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment