Advertisment

தமிழ் சினிமாவில் முதல் முறை... மைக் மோகன் ஜோடியாக குஷ்பு!

Tamil Cinema Update : மோகன் தற்போது ஹரா என்ற படத்தின் மூலம், 13 வருடங்களுக்கு பிறகு நாயகனாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ் சினிமாவில் முதல் முறை... மைக் மோகன் ஜோடியாக குஷ்பு!

Tamil Cinema Actor Mic Mohan Re-entry Movie Update : 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். 1977-ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மோகன், பாலுமகேந்திராவின் மூடுபனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானதால் தொடக்கத்தில் கோகிலா மோகன் என்று அழைக்கப்பட்டார்.

Advertisment

தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, விதி நூறாவது நாள், 24 மணி நேரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் நடித்த படங்களில் இவர் படல்கள் அனைத்து ஹிட்டடித்தது. மேலும் இவர் மைக் எடுத்து பாடினாலே படம் வெற்றியடைந்துவிடும் என்ற தோற்றம் உருவானது.

தொடக்கத்தில் கோகிலா மோகனாக இருந்த அவர் பின்னாளில் மைக் மோகனாக மாறினார். முன்னணி நடிகர்களாக ரஜினி கமல் விஜயகாந்த் ஆகியோருக்கு போட்டியான வசூலில் சாதனை படைத்த மோகன், கடந்த 1999-ம் ஆண்டு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு எந்த படங்களிலும் நடிக்காத மோகன், 2008-ம் ஆண்டு சுட்டப்பழம் என்ற படத்தில் ரீ- என்ட்ரி ஆனார்.

தொடர்ந்து 2009-ம் ஆண்டு கன்னடத்தில் கௌதம் என்ற படத்திலும், 2016-ம் ஆண்டு தெலுங்கில் அபியிதோ அம்மாயி என்ற படத்தில் நாயகனின் அப்பாவாக நடித்திருந்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த மோகன் தற்போது ஹரா என்ற படத்தின் மூலம், 13 வருடங்களுக்கு பிறகு நாயகனாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இது குறித்து ஹரா படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி,  “மோகனுக்கு இது ஒரு மறக்கமுடியாத மறுபிரவேசமாக இதுக்கும் என்பதால், அவருக்கு ஜோடியாக நடிக்க 90களின் பிரபல நடிகையாக தேடிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் குஷ்பு ஞாபகம் வந்து அவரை ஒப்பந்தம் செய்தோம். அவர் அண்ணாத்த படத்திற்கு பிறகு உடல் உடையை குறைத்தது எங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

குஷ்புவும் மோகனும் இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆத்ம கதை என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் இவர்கள் தமிழில் ஜோடி சேருவது இதுவே முதல்முறை. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், குஷ்புவின் கேரக்டர் படம் முழுவதும் தோன்றும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு குஷ்புவுக்கும் மோகனுக்கும் இடையிலான காட்சிகள் ஊட்டியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குந விஜய் ஸ்ரீ ஜி கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Khushbu Sundar Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment