முதலில் அவர் அப்பா அம்மாவிடம் பேசட்டும்... விஜய் குறித்து நெப்போலியன் பேச்சு | Indian Express Tamil

முதலில் அவர் அப்பா- அம்மாவிடம் பேசட்டும்… விஜய் குறித்து நெப்போலியன் பேச்சு

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நெப்போலியன், விஜயுடன் போக்கிரி படத்தில் நடித்திருந்தார்.

முதலில் அவர் அப்பா- அம்மாவிடம் பேசட்டும்… விஜய் குறித்து நெப்போலியன் பேச்சு
விஜய் நெப்போலியன்

நடிகர் விஜய் முதலில் அவரது அப்பா அம்மாவிடம் பேசட்டும் அதன்பிறகு நாங்கள் இருவரும் பேசுவது பற்றி பேசலாம் என்று நடிகர் நெப்போலியன் கூறியுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். இளம் வயதில் தனது முதல் படத்திலேயே வயதானவர் கெட்டப்பில் நடித்து அசத்திய நெப்போலியன் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நகரில், சின்னத்தாயி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தார்.

இதில் ரஜினிகாந்துடன் இவர் நடித்த எஜமான் படத்தில் கொடூர வில்லனாக நடித்த இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது. வில்லனாக நடித்து வந்த நெப்போலியன் 1994-ம் ஆண்டு வெளியான சீவலபெரி பாண்டி என்ற படத்தின் மூலம் நாயகான அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எட்டுப்பட்டி ராசா, கிழக்கும் மேற்கும், கலகல்ப்பு, வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் கமலுடன் விருமாண்டி, தசவதாரம், சரத்குமாருடன் தென்காசிப்பட்டினம், ஐயா, சீமராஜா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கடைசியாக தமிழில் அன்பறிவு என்ற படத்தில் நடித்திருந்தார். அரசியலில் இருந்த நெப்போலியன் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர்.

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நெப்போலியன், விஜயுடன் போக்கிரி படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு இருவரும் எந்த படத்திலும் இணைந்து நடிக்காத நிலையில், போக்கிரி படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன்பிறக இருவரும் பேசிக்கொள்வதில்லை்

இதனிடையே சமீபத்தில் அமெரிக்காவில் இருந்துகொண்ட ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள நெப்போலியன், விஜயுடன் இணைந்து படம் பண்ணலாமே என்று ஒருவர் கேட்டதற்கு, அவருடன் பேச நான் ரெடி அவர் ரெடியா என்று நீங்கள் தான் அவரிடம் கேட்க வேண்டும். விஜய் என்னிடம் பேசுவதை விட முதலில் அவரது அப்பா அம்மாவிடம் பேசட்டும்.

விஜய் சமீபகாலமாக தனது அப்பா அம்மாவிடமே பேசுவதில்லை என்று எனக்கு இங்கே அமெரிக்காவை தகவல் தெரிந்துள்ளது. ஆனால் இது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் விஜய் தனர் அப்பா அம்மாவிடம் முதலில் பேசட்டும் என்று கூறியுள்ளார். நெப்போலியனின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor napoleon say about actor vijay viral video