தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்’கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ பதிவின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 1983-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி பிறந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான இவர், 1987-ம் ஆண்டு வெளியான ஒரே ரத்தம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
திரைப்படங்களில் புரட்சிகரமான கேரக்டர்களில் நடித்திருந்த மு.க.ஸ்டாலின், தொடர்ந்து தனது அப்பாவின் வழியில் அரசியலில் கால்பதித்தார். சென்னையின் மேயராக பொறுப்பேற்றிருந்த இவர், 1984-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, 89-ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் தோல்வியை சந்தித்தார். அதன்பிறகு 1996- முதல் 2006 வரை சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், 2011 முதல் தற்போதுவரை சென்னை கொளத்தூர் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்.
மேலும் கட்சியில் இளைஞரணி செயலாளர், துணை முதல்வர் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தள்ள மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இவரது தலைமையிலான திமுக கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மு.க. ஸ்டாலின் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், மார்ச் 1-ந் தேதி (நாளை) முதல்வர் ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவரது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் சிறப்பாக செய்து வரும் நிலையில், முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதற்காக தனியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன் என் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“