Advertisment

தனுஷ் மீது ரஜினி வைத்த நம்பிக்கை: ஃப்ளாஷ்பேக் வீடியோ வைரல்

Tamil Cinema Update : ஒரு பட விழாவில் ரஜினிகாந்த் தனது மாப்பிள்ளை தனுஷ் குறித்து பேசிய வீடியோ பதிவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகினறனர்.  

author-image
WebDesk
New Update
தனுஷ் மீது ரஜினி வைத்த நம்பிக்கை: ஃப்ளாஷ்பேக் வீடியோ வைரல்

Tamil Cinema Actor Rajinikanth Speak About Dhanush : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து அறிவிப்பு கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது மாப்பிள்ளை தனுஷை் புகழ்ந்து பேசிய வீடியோ பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வயாவை திருமணம் செய்தகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் இருவரும் திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக கூட்டாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக ரஜினிகாந்த ரசிகர்கள் ரஜினியின் இந்த நிலையில் என்ன செய்வார் என்று புலம்பி தீர்த்தனர். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனாலும் இந்த அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் ரஜினிகாந்த் தனது மாப்பிள்ளை தனுஷ் குறித்து பேசிய வீடியோ பதிவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகினறனர்.  

இந்த வீடியோவில் பேசும் ரஜினிகாந்த, தனுஷ் என்னுடைய மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவி்லலை. அவர் ஒரு அருமையான பையன், தங்கப்பையன், அப்பா அம்மாவை மதிக்கிறார். பெற்றோர்களை தெய்வமாக மதிக்கிறார். பொண்டாட்டிய நல்லா பாத்துக்கிறாங்க. நல்ல அப்பா,? நல்ல மாப்பிள்ளை நல்ல மனிதர் நல்ல திறமைசாலி என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்களின் கோரிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளும் மருமகனும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும். யார் பேச்சுவார்த்த நடத்தினாலும் பரவாயில்லை. இருவரும் சேர்ந்தால் போதும் என்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரியவில்லை. அவர்களுககுள் நடப்பது குடும்ப சண்டை. கணவன் மனைவி பிரச்சினைதான் இதற்காக விவாகரத்து எல்லாம் செய்ய மாட்டார்கள் என்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறியிருந்தார். இதனிடையே விவாகரத்தை அறிவித்த தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

தனுஷ் தற்போது நடித்து வரும் நேரடி தெலுங்கு படமான வாத்தி படத்திலும், ஐஸ்வர்யா ஒரு காதல் பாடலை படமாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Rajinikanth Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment