பொதுவாக சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் இப்போது இருப்பதை விட சிறுவயதில் எப்படி இருந்திருப்பார்கள் என்று பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமான வலைதளங்களில் தேடி பார்ப்பது வழக்கமாக நடக்கும் நிகழ்வு. இதில் ஒரு சில பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாவது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு பிரபலத்தின் புகைப்படம் இணையத்தை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. இதில் அந்த பிரபலம் சிறுவயதில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். சமகால நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் முதல் தற்போதைய இளம் இயக்குநர்கள் வரை பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரஜினிகாந்த், அடுத்து தனது 169-வது படமாக ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில், சமீப காலமாக ரஜினியின் பழைய பிளாக் அன்ட் வெயிட் புகைப்படங்கள் பல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு குழந்தையை தூங்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
ரஜினி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வந்தாலும், அந்த படத்தில் உள்ள குழந்தை யாராக இருக்கும் இப்போது அவர் என்ன செய்துகொண்டிருப்பார் என்று ஒரு சிலர் தேட தொடங்கியுள்ளனர். இதேபோல் பழைய படங்களில் ரஜினியுடன் அதிகமாக இருந்தது நடிகை மீனா தான் ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பது மீனா இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

இதனால் இந்த தேடுதல் நீண்டுகொண்டே சென்ற நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள முக்கிய பிரபலம் இந்திய திரை இசையின் பின்னணி பாடகியும் கர்நாடக இசை கலைஞருமான தமிழகத்தை சேர்ந்த பாடகி அனுராதா ஸ்ரீராம். தனது 6 வயதில் இசையுலகில் கால் பதித்த அனுராதா, ஏராளமாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து 90-களில் வெளியான பம்பாய் படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடல் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து மின்சாரக்கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்நி உள்ளிட்ட மொழிகளிர் பல்வேறு பாடல்களை பாடியுள்ள அனுராதா தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதுவரை 1000-க்கு மேற்பட்ட இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ள அனுராதா, ரஜினியின் காளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட இந்த படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil