Advertisment

ஏ.கே 63 படத்தின் இயக்குனர்... மீண்டும் ஹீரோவாக நடிகர் சூரி... டாப் 5 சினிமா

சுந்தர்.சி தனது ஹிட் பட வரிசைகளில் ஒன்றாக அரண்மனை படத்தின் 4-வது பாகத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஏ.கே 63 படத்தின் இயக்குனர்... மீண்டும் ஹீரோவாக நடிகர் சூரி... டாப் 5 சினிமா

ஏகே 63 படத்தின் இயக்குனர் இவரா?

Advertisment

துணிவு படத்தை முடித்த நடிகர் அஜித்குமார் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஏகே 63 படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பில்லா ஆரம்பம் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த விஷ்ணுவர்த்தன் 3-வது முறையாக அஜித் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

அரண்மனை படத்தின் அடுத்த பாகத்தை தொடங்கும் சுந்தர் சி

நகைச்சுவை இயக்குனராக சுந்தர்.சி கடைசியாக காபி வித் காதல் என்ற படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து தற்போது தலைநகரம் 2 உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்து வரும் நிலையில், தனது ஹிட் பட வரிசைகளில் ஒன்றாக அரண்மனை படத்தின் 4-வது பாகத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் வினய், இரண்டாம் பாகத்தில் சித்தார்த், 3-வது பாகத்தில் ஆர்யா ஆகியோரை தொடர்ந்து 4-வது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட அமீர் – பாவனி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் – பாவனி இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தில் இருவரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அஜித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது துணிவு படம் வெளியாகியுள்ளது. இதில் படத்தில் நீங்கள் வந்ததே இரண்டு நிமிஷம் தான் இதுக்கு ஏன் இவ்வளவு பில்டப் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மீண்டும் ஹீரோவாக காமெடி நடிகர்

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ள நடிகர் சூரி, தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாகவும், இந்த படத்தில் மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முருகதாஸ் படத்தின் அடுத்த ஹீரோ?

தீனா, ரமணா, துப்பாக்கி உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தை இயக்கினார். அதன்பிறகு படங்கள் இயக்காத அவர், சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் ராங்கி படத்திற்கு கதை எழுதியிருந்தார். இதனிடையே தற்போது முருகதாஸ் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment