Advertisment

தேதி குறிச்சாச்சு... பீஸ்ட் ஆடியோ லான்ச்... இந்த முறை விஜய் அரசியல் பேசுவாரா?

Tamil Cinema Update ; பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமான நேரலையாக இருக்கும், தளபதி ரசிகர்கள் இதில் ஒரு பகுதியாக இருப்பார்கள்

author-image
WebDesk
New Update
தேதி குறிச்சாச்சு... பீஸ்ட் ஆடியோ லான்ச்... இந்த முறை விஜய் அரசியல் பேசுவாரா?

Tamil Cinema Beast Audio Launch Update : மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத்த இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது

Advertisment

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் ஏப்ரல் 14-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில். கடந்த காதலர் தினத்தில் இந்த படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் வெளியிடப்பட்ட 20 நாட்களில் யூடியூப்பில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

மேலும் சின்னத்திரை முதல் பெரிய திரை வரை பல்வேறு நடிகர் நடிகைகள் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் அரபிக்குத்து பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பி வரும் நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமான நேரலையாக இருக்கும் என்றும், தளபதி ரசிகர்கள் இதில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக டிக்கெட் வழக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  

விஜய்யின் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக இருந்து வரும் இந்த நிகழ்ச்சியில். விஜயின் பேச்சை கேட்க ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். ஏற்கனவே மாஸ்டர் மற்றும் புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பற்றி கூறி கருத்து வைரலாக பரவியது. அதே சமயம் இந்த பேச்சு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இதில் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது, பிரச்சனைக்கு வழிவகுத்தது. இது தொடர்பான செய்திகள் வைரலாக பரவியது. இந்நிலையில், சமீப காலமாக ஆடியோ வெளியீட்டு விழாவில், அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வரும் விஜய் பீஸ்ட் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Actor Vijay Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment