Advertisment

ரசிகர்களை சந்திக்கும் விஜய் : பனையூர் அலுவலக்கத்தில் முக்கிய ஆலோசனை

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Madras HC relief to actor Vijay in Tax evasion case

நடிகர் விஜய்

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள நிலையில், நாளை விஜய் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

இதனிடையே பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனறு தெலுங்க தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால், விஜய் நடித்துள்ள வாரிசு படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நடிகர் விஜய் நாளை தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை விஜய் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment