Advertisment

அந்த நாள் ஞாபகம்: 'விஜய் அறையில் பெரிய ரஜினி படம்'

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
அந்த நாள் ஞாபகம்: 'விஜய் அறையில் பெரிய ரஜினி படம்'

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சினிமா வாழ்க்கை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து செந்தூரப்பாண்டி, பூவே உனக்காக லவ்டுடே, காதலுக்கு மரியாதை, கில்லி, துப்பாக்கி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இவரின் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தளபதி 67 என்று அழைக்கப்படுகிறது.

இதனிடையே தனது வீடு மற்றும் சினிமாவில் தனது அனுபவம் குறித்து 90-களில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினி சார். சில வருடங்களுக்கு முன்பு எங்களது வீட்டை ஷூட்டிங்கிற்காக விட்டிருந்தோம். அப்போது ராஜாதி ராஜா படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் நடந்தது. அதற்காக ரஜினிசார் இங்கு வந்திருந்தார்.

அப்போது அவரை மீட் பண்ணி ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். நான் அவரின் தீவிர ரசிகன். எனது முதல் படம் நாளைய தீர்ப்பு பூஜையின் போது ரஜினி சாருடன் நான் எடுத்துக்கொண்ட படத்தை பெரிய சைஸ் எடுத்து எனது ரூமில் மாட்டி வைத்துள்ளேன். ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அருணாச்சலாம் ஷூட்டிங் நடக்கும்போது பக்கத்தில் எனது லவ்டுடே படத்தின் ஷூட்டிங் நடந்தது. அப்போது இடையில் ரஜினி சாரை சந்தித்து பேசினேன். என்று கூறியுள்ளார்.

90-களில் அவர் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment