பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பெயரை மாற்றியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, திரிஷா ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 6 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 5 மொழிளில் வெளியிடப்படும் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தற்போது இந்த படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் அனைவரும் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில், மிகவும் ஆளுமை மிக்க பெண் கதாபாத்திரமாக 'குந்தவை' கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் தங்கையான குந்தவை கேரக்டரில் நடிகை த்ரிஷா, நடித்துள்ளார். இதனிடையே படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை நீக்கிவிட்டு பொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டர் பெயரான 'குந்தவை' என மாற்றம் செய்துள்ளார். இந்த பெயர் மாற்றம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது த்ரிஷாவை பின்பற்றும் வகையில், நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் கணக்கில் 'ஆதித்த கரிகாலன்' என பெயர் மாற்றம் செய்துள்ளார். படத்தின் ப்ரமோஷன் பணிகளில் வித்தியாசம் காட்டும் நட்சத்திரங்களின் முயற்சி ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே கரிகால சோழனின் படைத்தளபதி வந்தியதேவனாக நடித்துள்ள கார்த்தி குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷாவிடம் லெட்டர் கொடுக்க லொக்கேஷன் கேட்டது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil