தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் மேல்முறையீடு செய்த மனுவை விசாரத்த நீதிமன்றம் அவர் ரூ15 கோடி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழ் சினிமா நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர் விஷால், படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதனிடையே விஷால் தனது நிறுவனத்தின் பட தயாரிப்பு பணிகளுக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடம் 21.29 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இந்த கடனை தங்கள் கொடுப்பதாக ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இந்த கடனை திரும்பி செலுத்துவம் வரை விஷால் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் தங்களுடையது என்று விஷாலுடன் ஒப்பந்ததம் போடப்பட்டுள்ளது. ஆனால் கடனை திருப்பி செலுத்தாமல் ஒப்பந்தத்தை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை விஷால் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் லைகா நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் பெயரில் ரூ15 கோடி நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் தனது சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் விஷால் ரூ15 கோடி பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் அந்த உத்தரவு தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள உரிமையியல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கக்கூடிய படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடிதளங்களில் வெளியிடக்கூடாது என்று தடை விதித்து விஷாலின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“