Advertisment

வெளியானது நயன்தாரா- விக்கி கல்யாண அழைப்பிதழ்: இடம், முகூர்த்த நேரம், டிரஸ் கோட் அறிவிப்பு

இந்த திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டபோது, அங்குள்ள ரிசார்ட்களில் நயன்தாரா ரசிகர்களின் புக்கிங் அலைமோதியது.

author-image
WebDesk
New Update
வெளியானது நயன்தாரா- விக்கி கல்யாண அழைப்பிதழ்: இடம், முகூர்த்த நேரம், டிரஸ் கோட் அறிவிப்பு

நானும் ரவுடி தான் திரைப்படம்  மூலம் காதல் வயப்பட்ட இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நாளை இந்து முறைப்படி திருமண பந்தத்தில் இணைகின்றனர்.

Advertisment

இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு திருமணம் சென்னை மகாபலிபுரம்  அருகே sheration grand விடுதியில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு மிகவும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இவர்களது திருமணம் எங்கு நடக்கின்றது எப்போது நடக்கின்றது என்பது மிகவும் ரகசியம் காக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டபோது, அங்குள்ள ரிசார்ட்களில் நயன்தாரா ரசிகர்களின் புக்கிங் அலைமோதியது. திருமணத்துக்கு பத்திரிகையாளர்களுக்கு கூட அனுமதி மறுக்கப் பட்டிருப்பதால் திருமணத்திற்கு பிறகு வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.

இந்நிலையில், திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்களை அழைத்துள்ள விக்கி -நயன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்க்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இதற்கிடையே விக்னேஷ் சுவன் - நயன்தாரா தம்பதியின் வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் மணமக்கள் பெயர், இருவரின் பெற்றோர் பெயர் மற்றும் திருமணம் நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களது திருமணத்திற்கு  பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் டிரெஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் மொமைல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அப்படியே தவறி மொமைல்போன் வரும் பட்சத்தில் ஹாலில் உள்ளே நுழைந்த பின் மொபைல் ஜாமரால் அனைவரது மொபைலும் செயல் இழக்கப்படும்.நயன் தரப்பு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் வருகை தர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் உறவினர் என்று சொல்லி யாரும் உள்ளே கூட நுழைய முடியாது.

இந்நிலையில் நேற்று அவர்களது திருமணத்திற்கு முன் மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு  மருதாணி நிகழ்ச்சியின் தகவல் அழகாக அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment