scorecardresearch

பாட்டின்னா இந்த பேரக் குழந்தைகளுக்கு உசுரு… ராதிகா வீட்டு சந்தோஷம்!

Tamil Cinema Update : தனது அம்மா ராதிகா மீது அதிக பாசம் வைத்துள்ள ரயான், தனது மகளுக்கு, ராத்யா என்று பெயர் சூட்டியுள்ளார்.

Actress Radhika Sarathkumar Update : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதிகளில் ஒருவர் ராதிகா – சரத்குமார். இருவரும் காதவித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஜோடி தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. தற்போது சரத்குமார் தென்னிந்திய மொழிகளிலும், ராதிகா தமிழிலும் பிஸியான நட்சத்திரங்களாக வலம் வந்தகொண்டிருக்கின்றனர்.

இந்த தம்பதிக்கு ரயான் என்ற மகள் உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவருடன் ரயானுக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஏற்கனவே தாரக் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த இரு ஆண்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தனது அம்மா ராதிகா மீது அதிக பாசம் வைத்துள்ள ரயான், தனது மகளுக்கு, ராத்யா என்று பெயர் சூட்டியுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரயான், அவ்வப்போது தனது குழந்தைகள் தொடர்பாக புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரயான் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் நடிகை ராதிகா தனது பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்.

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரயான், என்னை போலவே எனது குழந்தைகளும், எனது அம்மாவை மிகவும் நேசிக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுடன், சிறுவயதில் தான் தனது அம்மா ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ரயான் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

திருமணத்திற்கு பின் உடல் எடை கூடிய ரயான் சமீபத்தில் உடல் எடையை கனிமாக குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிடடிருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress radhika sarathkumar grandchild update