பெண் அமைச்சர் வேடம்… சீரியலில் செம்ம மாஸாக ரீ என்ட்ரி ஆகும் பாரதிராஜா நாயகி!

Tamil Serial Update : கலர்ஸ் தமிழின் சில்லுனு ஒரு காதல் சீரியலில் பல புதுமுகங்களுக்கு இந்த சீரியலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது

Colors Tamil Serial Update In Tamil : இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஜஸ்ரீ. தொடர்ந்து நீலக்குயில், முறை மாப்பிள்ளை, சேது, நந்தா, சண்டிவீரன், வர்மா ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1998-ம் சன்டியிவின் கங்கா யமுனா சரஸ்வதி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜஸ்ரீ, தொடர்ந்து அகல் விளக்குகள், வம்சம், மகள், சித்தி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போ ராஜஸ்ரீ கலர்ஸ் தமிழின் சில்லுனு ஒரு காதல் தொடரில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

தமிழில் சீரியல்கள் ஒளிபரப்பும் முக்கிய சேனல்களில் ஒன்றாக கலர்ஸ் தமிழில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சில்லுனு ஒரு காதல். கன்னட சீரியலான மங்களா கௌரி மடுவு என்ற சீரியலின் ரீமேக்கான இதில், சமீர் அகமது மற்றும் தர்ஷினி கவுடா இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பல புதுமுகங்களுக்கு இந்த சீரியலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் தற்போது சிறப்பு தோற்றத்தில் நடிகை ராஜஸ்ரீ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்த நிலையில், ராஜஸ்ரீ தற்போது தனது கவனத்தை சீரியல் பக்கம் திருப்பியுள்ளார். இந்த சீரியலில் இவர், கல்பனா தேவி என்னும் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடித்தால் அது ஒருநாள் விமர்சனத்துடன் போய் விடும். ஆனால் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் தினம் தினம் பல விமர்சனங்களைச் சந்திக்க நேரிடுகிறது என ராஜஸ்ரீ கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress rajasree entry in sillunu xu kathal serial colors tamil

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com