New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Suja-Varuni.jpg)
நடிகை சுஜா வருணி இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்
நடிகை சுஜா வருணி இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்
நடிகர் திலகம் சிவாஜி வீட்டு மருமகள் சுஜா வருணி தற்போது வெளியிட்டுள்ள சுற்றுலா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு தமிழில் வெளியான பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சுஜா வருணி. தொடர்ந்து வர்ணஜாலம், கஸ்தூரி மான், மாயாவி, பள்ளிக்கூடம், நாளை, திருத்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சுஜா வருணி, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் கடைசியாக சத்ரு என்ற படத்தில் நடித்திருந்த சுஜா வருணி தெலுங்கில் வெளியான த்ரிஷயம் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். திரைப்படம் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் சுஜா வருணி பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் பங்கேற்று 91 நாட்கள் வரை தாக்குபிடித்து இருந்தார்.
திரைத்துறையில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகர் சிவாஜி தேவ் என்வரை திருமணம் செய்துகொண்ட சுஜா வருணிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிவாஜி தேவ் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். இவர் தமிழில் சிங்கக்குட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜா வருணி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
உச்சக்கட்ட க்ளாமரில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில் ’பிளவுஸ் போட மறந்திட்டிங்க மேடம்’ என்றும் ’டைட்டானிக் ரோஸ் மாதிரி இருக்கீங்க’ என்றும் பலவிதமான கருத்துக்களை கூறி வரும் நிலையில், லைக்ஸ் குவிந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.