Advertisment

தயாளனாக சமுத்திரக்கனி... முத்தழகனாக ஜி.எம்.சுந்தர்... துணிவு கதாபாத்திரங்கள் அறிமுகம்

துணிவு படம் விஜயின் வாரிசு படத்துடன் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
தயாளனாக சமுத்திரக்கனி... முத்தழகனாக ஜி.எம்.சுந்தர்... துணிவு கதாபாத்திரங்கள் அறிமுகம்

அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment
publive-image

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் ஆகிய மூவரும் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டள்ள இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

image

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் 3 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துணிவு படம் விஜயின் வாரிசு படத்துடன் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

image

இதனால் கோலிவுட் சினிமா வட்டாரம் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், இரு படக்குழுவினரும் தங்களது படங்கள் குறித்து புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர்கள் நடிகைகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

image

அதன்படி, இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி தயாளன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அஜய் ராமச்சந்திரன் என்ற கேரக்டரிலும், ராஜதந்திரம் வீரா ராதா என்ற கேரக்டரிலும், ஜிஎம் சுந்தர் முத்தழகன் என்ற கேரக்டரிலும், சார்பட்டா பரம்பரை ஜான் கோக்கன் கிரிஷ் என்ற கேரக்டரிலும், பக்ஸ் ராஜேஷ் என்ற கேரக்டரிலும், நடித்துள்ளனர்.

image

இந்த பட்டியலில் நாயகன், அஜித் மற்றும் நாயகி மஞ்சுவாரியாரின் கேரக்டரல் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாக வில்லை. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி துணிவு படம் வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamil Cinema Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment