பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவருமான அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
ஜிப்ரான் இசையமைத்த இந்த படத்தை எச்.வினோத் இயக்கியிருந்த நிலையில் போனி கபூர் தயாரித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணிவு படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியானது. கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து த்ரில்லர் பாணியில் வெளியான துணிவு படம் ஐந்தே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை (மொத்தம்) கடந்துள்ளது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் போட்டி நிலவி வரும் நிலையில், இறுதியில், இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக வரவேற்பை பெற்று வருவதால், தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். துணிவு படம் வெளியான அன்று தமிழகம் முழுவதும் நள்ளிரவு 1 மணி காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்தப் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் தெலுங்கில் (தெகிம்பு என்ற பெயரில்) வெளியிடப்பட்டது. இது குறித்து வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பதிவில், துணிவு உலகம் முழுவதும் ரூ. 150 கோடியைத் தாண்டியது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை நடத்தி வருகிறது. என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் சரிகமா சினிமாஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், வட அமெரிக்காவில் இப்படம் வசூலில் $1 மில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது. வட அமெரிக்கா காம்ஸ்கோர் அறிக்கையின் மொத்த வசூல் இப்போது அதிகாரப்பூர்வமாக $1M குறியைத் தாண்டியுள்ளது. அனைத்து திரைப்பட ஆர்வலர்களுக்கும் அஜித் சார் ரசிகர்களுக்கும் நன்றி! என்று பதிவிட்டுள்ளனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“