Advertisment

'ஒவ்வொரு இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம்' - ரசிகர்கள் ரியாக்சன்ஸ்!

Tamil Cinema Valimai Update : அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
'ஒவ்வொரு இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம்' - ரசிகர்கள் ரியாக்சன்ஸ்!

Valimai Review Updates in tamil: நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் இந்தி நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா” இசையமைத்துள்ளார்.

Advertisment

வலிமை திரைப்படம் திட்டமிட்டப்படி இன்று காலை தியேட்டரில் வெளியான நிலையில், முன்னதாக தியேட்டர் வளாகங்கள் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடினர். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்தார்கள். அதோடு பால் அபிஷேகம் செய்தும் மகிழ்ந்தனர்.

வலிமை திரைப்படம் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தனர். அவர்கள் தியேட்டரில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது.

படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித் நடிப்பு மிகவும் அருமை. இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்து படத்தில் உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 14:03 (IST) 24 Feb 2022
    'தீரன் அதிகாரம்' படத்தை மிஞ்சிய 'வலிமை' - ரசிகர்கள் கருத்து!

    நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரசிகர் ஒருவர், " தீரன் அதிகாரம் " மிஞ்சிய " வலிமை " Hard work on தல & Director H.vinoth. Valimai for 💖💖💖💖/5 Rating " என்று பதிவிட்டுள்ளார்.



  • 13:19 (IST) 24 Feb 2022
    வலிமை ரிலீஸ்... 932 நாட்கள் காத்திருப்பு முடித்தது; உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!

    நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. வலிமை ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடினர். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்து வைத்தார்கள்.

    திட்டமிட்டப்படி இன்று காலை வலிமை திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது. தமிழகத்தில் மட்டும் சுமார் 700 திரையரங்குகளில் வலிமை திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில், ஒரு அஜித் ரசிகர் 932 நாட்கள் காத்திருப்பு முடித்தது! என்று தெரிவித்துள்ளார்.



  • 11:46 (IST) 24 Feb 2022
    கனடாவில் 'வலிமை'

    கனடாவின் டொரன்டோ நகரில் வலிமை படத்தில் நடிகர் அஜித் குமாரின் பெயர் வருவதை வீடியோ எடுத்து வெளியிட்ட தீவிர ரசிகர் ஒருவர்.

    valimaivalimaifdfs

    at Toronto, Canada pic.twitter.com/9y7ixZMaUq

    — Thoatta/ தோட்டா (@TorontoPodiyan) February 24, 2022



  • 11:45 (IST) 24 Feb 2022
    கனடாவில் 'வலிமை'

    கனடாவின் டொரன்டோ நகரில் வலிமை படத்தில் நடிகர் அஜித் குமாரின் பெயர் வருவதை வீடியோ எடுத்து வெளியிட்ட தீவிர ரசிகர் வருவர்.

    valimai valimaifdfs

    at Toronto, Canada pic.twitter.com/9y7ixZMaUq

    — Thoatta/ தோட்டா (@TorontoPodiyan) February 24, 2022


  • 11:18 (IST) 24 Feb 2022
    பைக் ஸ்டன்ட்ஸ் அற்புதம்: நடிகர் அருண் விஜய் பாராட்டு

    வலிமை படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டன்ட்ஸ் காட்சிகள் அற்புதமாக இருந்ததாக நடிகர் அருண் விஜய் தெரிவித்தார். இவர், என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 11:17 (IST) 24 Feb 2022
    திரையரங்குகளில் திரண்ட பாசமிகு ரசிகர்கள்



  • 10:38 (IST) 24 Feb 2022
    வலிமை வெறித்தனம்...!

    வலிமை வெறித்தனமாக இருக்கிறது என்று ரசிகை ஒருவர் ட்வீட் வெளியிட்டுள்ளார்.



  • 10:05 (IST) 24 Feb 2022
    நடிகர் சூரி வாழ்த்து

    திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று நடிகர் சூரி டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.



  • 09:53 (IST) 24 Feb 2022
    வலிமை படத்துக்கு வாழ்த்து கூறிய இளம் நடிகர்

    வலிமை படம் வெற்றியடைய இளம் நடிகர் கெளதம் கார்த்திக் வாழ்த்து கூறினார்.



  • 08:50 (IST) 24 Feb 2022
    படம் வேற லெவல்-ரசிகர்கள் மகிழ்ச்சி

    நடிகர் அஜித் குமாரின் வலிமை படம் வேற லெவல் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் அஜித் நடிப்பு அருமை. இதுபோன்ற படம் இதுவரை பார்த்ததே இல்லை என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர்.



  • 08:46 (IST) 24 Feb 2022
    தஞ்சையில் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்

    வலிமை திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தஞ்சாவூரில் கேக் வெட்டி அஜித் ரசிகர்கள் கொண்டாடினர்.



  • 08:30 (IST) 24 Feb 2022
    வலிமை படத்துக்கு வந்த குட்டி ரசிகர்!

    வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு அஜித்தின் புகைப்படம் அச்சிடப்பட்ட டிஷர்ட் அணிந்து குட்டி ரசிகர் ஒருவர் வந்தார். அவரது புகைப்படத்தை ஏஜிஎஸ் சினிமா டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.



  • 08:26 (IST) 24 Feb 2022
    சூப்பர் ஹிட்டாக வாழ்த்துகள்: வரலட்சுமி சரத்குமார்

    வலிமை படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக வாழ்த்துக்கள். நீங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பீர்கள் என்று தெரியும். படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.



  • 07:44 (IST) 24 Feb 2022
    வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு

    கோவையில் வலிமை திரைப்படம் வெளியான பூ மார்க்கெட் அர்ச்சனா திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • 07:28 (IST) 24 Feb 2022
    பால் ஜாக்கிரதை...நைஸாக தூக்கிய ரசிகர்கள்

    சாலையில் வந்த பால் வண்டியிலிருந்து பால் பாக்கெட்களை அலேக்காக தூக்கிய அஜித் ரசிகர்கள்



  • 07:22 (IST) 24 Feb 2022
    முதியோர் இல்லத்தில் அஜித் படத்திற்கு தீபாராதனை

    வலிமை திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த நாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். காலை 4 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ள நிலையில், அறம்மகிழ் அரக்கட்டளை என்ற முதியோர் இல்லத்தில் நடிகர் அஜித்தின் படத்திற்கு தீபாராதனை காண்பிக்கும் வீடியோ கட்சி வைரலாகி வருகிறது.



  • 07:21 (IST) 24 Feb 2022
    வலிமை ரசிகர்கள் ஆரவாரம்

    கும்பகோணத்தில் வலிமை படத்தின் ரசிகர் சிறப்பு காட்சிக்காக ஆராவாரத்துடன் காத்திக்கும் ரசிகர்கள்



  • 07:19 (IST) 24 Feb 2022
    ரோகிணி திரையரங்கில் வலிமை படக்குழு

    ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் வலிமை திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர், கார்த்திகேயா மற்றும் ஹூமா குரேஷி



  • 23:13 (IST) 23 Feb 2022
    அரபிக்குத்து பாடலுக்கு அஜித் ரசிகர்கள் நடனம்

    அஜித்தின் வலிமை படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.



  • 23:08 (IST) 23 Feb 2022
    வலிமை ரிலீஸ் கொண்டாட்டம்

    வலிமை படம் வெளியீட்டை முன்னிட்டு சாலை நெடுக்கிலும் வைக்கப்பட்டுள்ள வலிமை கட்அவுட்கள்



  • 23:05 (IST) 23 Feb 2022
    வலிமை திருவிழா

    வலிமை படத்திற்கான ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கு திரண்டு நிற்கும் ரசிகர்கள் கூட்டம்



  • 23:04 (IST) 23 Feb 2022
    வலிமை வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் ரசிகர்கள்

    வலிமை திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த நாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். காலை 4 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் சார்பாக வலிமை படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 23:01 (IST) 23 Feb 2022
    கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் அஜித் ரசிகர்கள்

    வலிமை திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த நாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். காலை 4 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ள நிலையில், ரசிகர்கள் இப்போதே கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர்.



  • 22:53 (IST) 23 Feb 2022
    கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் அஜித் ரசிகர்கள்

    வலிமை

    valimai Celebration mode never settle down till now🔥🔥🔥valimaifdfs 4AM Show 🔥🔥🔥valimaiinkc valimaithepowerrg3laserinkc dolbyatmos 🔥🎥💯valimaistorm valimaifromfeb24aிமை aிமைதிருவிழா pic.twitter.com/ai7U00swOU

    — Krishnaveni Cinemas💙 (@kcinemas_offl) February 23, 2022

    திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த நாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். காலை 4 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ள நிலையில், ரசிகர்கள் இப்போதே கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர்.



  • 22:49 (IST) 23 Feb 2022
    உலக தலைவர்களுடன் நடிகர் அஜித் : வைரல் போஸ்டர்

    வலிமை திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த நாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போஸ்டர் அடித்துள்ள ரசிகர்கள் நடிகர் அஜித் குமார் இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக தலைவர்கள் பலருடன் இருப்பது போல போஸ்டரை வடிவமைத்துள்ளனர்.



  • 22:45 (IST) 23 Feb 2022
    முன்பதிவிற்காக முந்தி செல்லும் ரசிகர்கள்

    வலிமை படத்திற்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் ஒரு வாரத்திற்காக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வலிமை டிக்கெட் முன்பதிவிற்காக ரசிகர்கள் கேட்டை திறந்து ஓடி வரும் கட்சி ட்விட்டர் தளத்தில் வெளியாகியுள்ளது.



Tamil Cinema Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment