Advertisment

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா த்ரில்லர் நிதி... டைரி விமர்சனம்

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் 1995 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் 375 என்னும் மர்மமான பேருந்து பற்றிய கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் டைரி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா த்ரில்லர் நிதி... டைரி விமர்சனம்

அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் திரில்லர் நாயகன் அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள டைரி பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

Advertisment

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய வகை "ஹாரர் த்ரில்லர்" படம் டைரி. சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் 1995 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் 375 என்னும் மர்மமான பேருந்து பற்றிய கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் டைரி.

அருள்நிதி தனது பெயரை "திரில்லர் நிதி" என்று மாற்றிக் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து திரில்லர் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில்,  "டி- பிளாக், தேஜாவு"க்கு அடுத்து "டைரி" படம் வெளியாகி உள்ளது சமீபத்தில் வெளியான அவரது படங்கள் மக்களை பெரிய அளவில் திருப்தி படுத்ததவறியது. ஆனால் அந்த தவறை டைரியின் மூலம் சரிப்படுத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் முதல் பாதியில், படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பின்னணியை விவரித்து கதைக்குள் கொண்டு வருவதற்கு சிறிது நேரம் எடுத்துக் எடுத்துக்கொண்டாலும் அனைவரும் பேருந்தில் பயணம் செய்த தொடங்கும் அந்த நொடியில் இருந்து படத்தின் கதைக்களமும் வேகம் எடுக்கிறது.

படத்தின் இடைவேளையில் வரும் எதிர்பாராத திருப்பம் படம் "திரில்லரா அல்லது ஹாரார்" படமா என்று படம் பார்ப்பவர்களை குழம்ப வைக்கிறது. இடைவேளை முடிந்து சீட்டிற்கு வரும் பார்வையாளர்களை அந்த சீட்டின் நுனியிலேயே படம் முடியும் வரை அமர வைக்கிறார் இயக்குனர், அந்த அளவிற்கு இரண்டாம் பாதியில் வரும் திரைக்களம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் வரை ஆங்காங்கே அவிழும் மர்ம முடிச்சிகள் பார்ப்பவர்களை பெரிய அளவில் வியக்க வைக்கிறது. இதற்கெல்லாம் மேலாக படத்தின் கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் ,ஒரு தரமான திரில்லர் படம் பார்த்த மனநிறைவை மக்களுக்கு கொடுக்கிறது. ஆங்காங்கே வரும் "ஒன் லைன் காமெடி வசனங்கள்" சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.

படத்தின் பின்னணி இசை பல இடங்களில் திகிலூட்டுகிறது. மேலும் படத்தில் வரும் மூன்று பாடல்களும் திரைக்களத்துடன் பயணிப்பதால் ரசிக்க வைக்கிறது. படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான காட்சிகளை கச்சிதமாக படமாக்கி ஊட்டி மலைகளின் அழகோடு பயத்தையும் சேர்த்து ரசிகர்களை உள்ளிழுத்து இருக்கிறார்.

படத்தின் நீளம் கச்சிதமாக இருப்பதால் ஒரு வித்தியாசமான த்ரிலரை பார்த்த மனநிறைவை தருகிறது.மொத்தத்தில் டைரிக்கு தைரியமாக செல்லலாம்.

நவீன் சரவணன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment