Advertisment

டிரைலருக்கே இப்படியா? தியேட்டரை ரணகளமாக்கிய விஜய் ரசிகர்கள்

Tamil Cinema Update : ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 2-ந் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
டிரைலருக்கே இப்படியா? தியேட்டரை ரணகளமாக்கிய விஜய் ரசிகர்கள்

Tamil CInema Beast Trailer Update :பீஸ்ட் படத்தின் டிரெயலரை இலவசமாக திரையிட்ட தியேட்டரில நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைலாக பரவி வருகிறது.  

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் பீஸ்ட். டாக்டர் படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர் மேலும் ரெட்டின் கிங்ஸ்லே மற்றும் யோகி பாவு ஆகியோர் காமெடி வேடத்தில் நடித்துள்ளனர்.

சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுநதுள்ள நிலையில், ஏற்கனவே வெளியான இந்த படத்தின் பாடல்கள் அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா என்ற 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து இந்த இரு பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரபிக்குத்து பாடலுக்கு ஏராளமாக திரை நட்சத்திரங்கள் நடகமாடியள்ளனர்.

இதனால் இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.  மேலும் ப{ஸ்ட் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் 13-ந்தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் அல்லர் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 2-ந் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இயக்குனர் செல்வராகவன் கதை சொல்வது போல் தொடங்கும் இந்த டிரெய்லரில், வீரராகவன் என்ற கேரக்டரில் விஜய் வருகிறார். ஒரு பெரிய ஷாப்பிங் மாலில், புகுந்து அங்குள்ள மக்களை பனைய கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் தீவிரவாத கும்பலிடம் இருந்து மக்களை விஜய் எப்படி மீட்டார் என்பது தான் படத்தின் கதை என்பது டிரெய்லரை பார்க்கும்பொது ஓரளவு புரிகிறது.

இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்திய அளவில் பல ரெக்கார்டுகளை உடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை யூடியூப் தளத்தில் பீஸ்ட் டிரெய்வர் 2.1 மில்லியன் லைக்ஸ், 21 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. அந்த வகையில் நெல்லையில உள்ள ஒரு திரையரங்கில், பீஸ்ட் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஆராவாரத்தில் திரையரங்கின் கண்ணாடி, நாற்காலி உள்ளி்ட பல பொருட்களை அடித்து நொருக்கியுள்ளனர். இதனால் நெல்லை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திரையரக்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இதனால் பிரச்சினைகள் ஏற்படும்போது திரையரங்கு உரிமைத்தை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், டிரெய்லருக்கே இப்படி என்றால் படம் வெளியாகும்போது என்ன நிலைமையே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment