Advertisment

கார் வாங்கிய இளம் நடிகை.. இந்தோனேஷிய மொழியில் தமிழ் படம்.. மேலும் சினிமா செய்திகள்

இந்தப் படம் தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்

author-image
WebDesk
New Update
கார் வாங்கிய இளம் நடிகை.. இந்தோனேஷிய மொழியில் தமிழ் படம்.. மேலும் சினிமா செய்திகள்

இந்தோனேஷிய மொழியில் டப்பிங் செய்யப்படும் தமிழ் படம்!

Advertisment

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றது.

சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது.

இந்த நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசிய மொழியான 'பஹாசா' மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

ரிலீசுக்கு ரெடியான வலிமை… உலகின் மிகப்பெரிய தியேட்டரில் முதல் ஷோ பார்க்கும் ஜான்வி கபூர்!

பி.டி.பால்கன் என்ற நிறுவனம் இதை தயாரிக்க உள்ளது. இதன்மூலம்  இந்தோனேஷியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ஒத்த செருப்பு திரைப்படம் பெற்றுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் ஒத்த செருப்பு திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை நடிகர் பார்த்திபன் இயக்கி வருகிறார். இதை நடிகர் அமிதாப் பச்சன் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

வலிமை படத்துக்கு என்ன சான்றிதழ் தெரியுமா?

நடிகர்  அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'.

இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

'வலிமை' திரைப்படம் வரும் பிப்ரவரி 24 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்நிலையில் வலிமை' திரைப்படத்திற்கு சென்சாரில் தணிக்கைக் குழு 'யு /ஏ 'சான்றிதழ் வழங்கியுள்ளது. 

நடிகர் அஜித்-இயக்குநர் வினோத்-தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிப்பில் மிரட்டிய அக்ஷய் குமார்: புதிய படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் அக்ஷய் குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். இவரது நடிப்பில் பச்சன் பாண்டே படம் தயாராகி உள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் இன்று வெளியானது.

இந்தப் படம் தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.

ஜிகர்தண்டாவில் பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

புது கார் வாங்கிய இளம் நடிகை

96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடிப்பில் கவர்ந்த நடிகை கெளரி ஜி கிஷான், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் மாணவியாக நடித்து கலக்கி இருந்தார்.

இவர், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக மகிழினி என்ற ஆல்பம் பாடலிலும் நடனமாடி இருந்தார்.

இந்நிலையில், இவரது நெடுநாள் கனவான கார் வாங்கும் கனவை நிறைவேற்றியுள்ளார்.

ஜெர்மனி தயாரிப்பான வோல்க்வேகன் காரை அவர் வாங்கியுள்ளார்.

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலை ஒலிக்கவிட்டு அவர் கார் ஓட்டும் வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment