Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் ஷிகர் தவான் வரை ; சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்டு குரல்

தந்தை மற்றும் மகன் ஒரே நேரத்தில் உயிரிழந்தது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
P Chidambaram Opinion on Jayaraj Bennix death

P Chidambaram Opinion on Jayaraj Bennix death

Tamil Cinema celebrities demand justice for Jayaraj and Fenix : அரசு கூறியிருந்த நேரத்திற்கும் அதிகமாக கடையை திறந்து வைத்திருந்த காரணத்தால் சாத்தான்குளத்தை சேர்ந்த ஃபெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் என்பவர்களை காவல்துறை கைது செய்தது. காவல்நிலையத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதால் அவ்விருவரும் கடந்த திங்கள் கிழமையன்று உயிரிழந்தனர். தந்தை மற்றும் மகன் ஒரே நேரத்தில் உயிரிழந்தது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் : திமுக நிதி உதவி

இந்த மரணங்களுக்கு நீதி கேட்டு கடையடைப்பு தமிழகம் முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விருவர் மரணத்திற்கும் நீதி வேண்டும் என்று ஒவ்வொருவரும் தற்போது தங்களின் கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சுசித்திரா

ஆர்.ஜே. மற்றும் பாடகியான சுசித்திரா தன்னுடைய கடுமையான  கண்டனங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக அனைத்து தரப்பினராலும் ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஜெயம் ரவி

சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை. இது போன்ற மனிதாபிமானமற்ற செயலுக்கு உடனே தண்டனை கிடைக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ்

தாமதமாக கிடைக்கும் நீதியும் அநீதியே என்று மேற்கோள் காட்டியிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த நிகழ்வினை மனிததன்மை அற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைரா தஸ்தூர்

நம் நாட்டு காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று அமைரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வரலக்‌ஷ்மி சரத்குமார்

யார் செய்தாலும் தவறு என்றால் தவறு தான். சாத்தான்குளம் காவல்துறையினரின் இந்த செயல் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். ஃபெனிக்ஸ் மற்றும் ஜெயராஜின் குடும்பத்திற்கு ஆறுதலை எப்படி கூறுவது என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

மஹத்

நடிகர் மஹத்தின் ட்வீட்

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்க நாம் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஷாந்தனு

ஹன்சிகா மோத்வானி

ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். நம் நாட்டு காவல்துறையின் மீதும் நம் நாட்டின் மீதும் ஏற்படுத்தியிருப்பது மாபெரும் களங்கம். அனைவரும் நீதியின் முன் சமம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கோ, யாருக்கோ நடக்கும் அநீதிக்கெல்லாம் குரல் கொடுக்கின்றோம். நம் நாட்டில் நம் அருகில் இருக்கும் நபர்களுக்கு நாம் குரல் கொடுக்கவில்லை என்றால் இது போன்ற சூழல் நாளை நமக்கும் ஏற்படும் என்று பலரும் தங்களின் ஆதங்கத்தினை முன்வைத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Saathankulam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment