scorecardresearch

தனித்துவம் இருந்தால் இயக்குனர்கள் தேடி வருவார்கள் : விருமன் பட ஒளிப்பதிவாளர்

எனக்கு வெற்றிமாறன் அவர்களை மிகவும் பிடிக்கும் அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது

தனித்துவம் இருந்தால் இயக்குனர்கள் தேடி வருவார்கள் : விருமன் பட ஒளிப்பதிவாளர்

க. சண்முகவடிவேல்

உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை (viscom) மாணவர்களின் வண்ணமிகு ஓவியங்கள், புகைப்படங்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநகரம், மெஹந்தி சர்க்கஸ் மற்றும் விருமன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒளிப்பதிவாளர் செல்வகுமார் கூறுகையில், நாளை உலகப் புகைப்படத்தை முன்னிட்டு இன்று பெரியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். இங்கு மாணவ மாணவிகளின் பெயிண்டிங் மற்றும் புகைப்படங்கள் மிகவும் அருமையாக இருந்தது.

2017-ல் முதல் படம் ஒளிப்பதிவு பதிவு செய்த போது இருந்த தொழில்நுட்பம் தற்பொழுது மாறியுள்ளது. இந்த நிலை வருடத்திற்கு வருடம் மாறக்கூடியது. புதிய நுட்பத்துடன் தரமும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தற்போது உலகம் தர வாய்ந்த கேமரா கிடைக்கிறது.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கீழ் சீனியர்கள் பலர் பணியாற்றி இருக்கிறார்கள். நான் மூன்றாவது தலைமுறையாக தற்போது பணியாற்றி வருகிறேன்.அவரைப் போல பணியாற்ற வேண்டுமென எல்லோரும் விரும்புகின்றனர்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை களத்துக்கு தகுந்தார் போல ஒளிப்பதிவு செய்து கொண்டு வருகிறேன். தற்போது எனது ஒளிப்பதிவில் விருமன் படம் வெற்றிகாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  எனது அடுத்த படம் 1947 விறுவிறுப்பான கதைக்களம் கொண்டது. கதை சொல்லுகிற இடத்திற்கு சென்று அதற்கு தகுந்தார் போல எங்களது ஒளிப்பதிவு அமைப்போம்.

 1947 என்ற படம் அந்த ஒரு மண் சார்ந்த கிராமத்தில் நடைபெறுகிறது. எந்த இடத்திலும் மின் இணைப்பு இல்லாத ஒரு கதைக்களம் என்கிற போது அங்கு ஒரு மின்விளக்கு அல்லது மின்கம்பம் இருக்கக் கூடாது அது தகுந்தார் போல இடம் தேர்வு செய்து ஒளிப்பதிவை மேற்கொள்ள கொள்வோம்.

தற்போது விஸ்காம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். பெயிண்டிங்காக இருந்தது தற்பேது போட்டோகிராபியாக வந்திருக்கிறது. போட்டோகிராபி உள்ளவர்களுக்கு இன்று வரவேற்பு உள்ளது. சரியான கவனம் செலுத்தினால் இந்த போட்டோகிராபியில் எங்கு வேணாலும் யார் வேணாலும் ஜெயிக்கலாம்.

ஜார்ஜ் கிரேஸ் வில்லியம் என்பவரிடம் அசிஸ்டன்டாக ராஜா ராணி கத்தி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி வந்தேன். 2017ம் ஆண்டு மாநகரம் என்ற படத்தில் ஒளிப்பதிளராக பணியாற்றினேன். என்னுடைய சீனியர் எனக்கு என்ன கற்றுக் கொடுத்தாரோ அதே தான் என்னுடைய ஜூனியர்களுக்கு நான் கற்றுத் தருகிறேன்.

அவர் அவர்களுக்கு ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இயக்குநர்கள் தேடி வருவார்கள். எனக்கு வெற்றிமாறன் அவர்களை மிகவும் பிடிக்கும் அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது என தெரிவித்தார்

இந்நிகழ்வில் புனித வளனார் கல்லூரி மற்றும் மீனாட்சி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் பிளஸ்சி,பேராசிரியர் செந்திலதேவி ஆகியோர் செய்திருந்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema cinematographer selvaraj in trichy evr college function