திருக்கடையூர் கோவிலில் நடிகர் செந்தில் பீமரத சாந்தி திருமணம்: குவியும் வாழ்த்துக்கள்

கடந்த மார்ச் 23-ந் தேதி தனது 72-வது வயதில் அடியெடுத்து வைத்த நடிகர் செந்தில், திருக்கடையூர் கோவிலில் திருமணம் செய்துகொண்டார்

Actor Senthil
நடிகர் செந்தில் பீமரத சாந்தி திருமணம்

70 வயதை கடந்துள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலு மயிலாடுதுறையில் உள்ள திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் செந்தில். 1979-ம் ஆண்டு வெளியான ஒரு கோயில் இரு தீபம் என்ற படத்தின் மூலம் தனது திரைபயணத்தை தொடங்கிய செந்தில், 1980-90 களில் தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நட்சத்திரமாக இருந்தார். இவரது காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதேபோல் இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து நடித்த காட்சிகள் ஆண்டுகள் கடந்தாலும் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசித்து பார்க்கும் வகையில் உள்ளது. கவுண்டமணி – செந்தில் காமெடி ஜோடியை வீழ்த்த தமிழ் சினிமாவில் தற்போதுவரை எந்த ஜோடியும் இல்லை என்று சொல்லலாம். வயது முதிர்வு காரணமாக செந்தில் கவுண்டமணி இருவருமே திரைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஓரிரு படங்களில் நடித்து வரும் செந்தில் கடைசியாக பிஸ்தா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 23-ந் தேதி தனது 72-வது வயதில் அடியெடுத்து வைத்த நடிகர் செந்தில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பீமரத சாந்தி திருமணம் செய்துகொண்டார்.

ஆயுள் விருத்திக்காக சிறப்பு ஹோமங்கள் செய்யப்படும் இந்த கோவிலில், 60 வயதை கடந்தவர்கள் சஷ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் நடத்தினால் ஆயுள் விருத்தியாகுமு் என்பது ஐதீகம். அந்த வகையில் தற்போது 70 வயதை கடந்துள்ள நடிகர் செந்தில் பீமரத சாந்தி செய்துள்ளார்.

இதற்காக நடிகர் செந்தில் தனது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதி பிரபு, மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் திருக்கடையூர் கோவிலுக்கு வந்துள்ளார். தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற கஜபூஜை, கோபூஜை மற்றும் இரண்டு கால யாகசாலை பூஜையில் பங்கேற்றுள்ளார். அடுத்து ஆயுள் விருத்திக்காக ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. அதன்பிறகு இரண்டாம் கால பூஜைகள் நடத்தப்பட்டு பீமரத சாந்தி திருமணம் நடத்தப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema comedian senthil beemaradha wedding 72th age

Exit mobile version