தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த இசைஞானி இளையராஜா தான் மஜ்னுவை விட அதிகமாக காதலித்ததாக கூறியுள்ளார்.
1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் இளையராஜா. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு தனது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தனது இசை மற்றும் பாடல்கள் மூலம் தமிழ் சினிமாவில் பல நாயகிகளை அழகாக மாற்றியுள்ளார்.
அதேபோல் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாமல் அறிமுக நடிகர்கள், அறிமுக இயக்குனர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தனது இசையால் வெற்றிகளை குவித்த இளையராஜா இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாராள இன்றவும் பரபரப்பாக சினிமாவில் இயங்கி வருகிறார். 80-90 களில் வந்த இளையராஜாவின் ஹிட் பாடல்கள் இன்றைய ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியில் திரைத்துறையின் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் கார்த்திக் நடிகை ராதா இருவரும் தங்களது முதல் பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் நான் இந்தியாவில் எங்கு சென்றாலும் வெளிநாடு சென்றாலும் எனக்காக இளையராஜா சார் போட்ட பாடல்களை வைத்து தான் அழைக்கிறார்கள் என்று கூறினார்.
அதன்பிறகு நீங்கள் இத்தனை காதல் பாடல்கள் கொடுத்து வெற்றியையும் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் சினிமாவில் பல ஹீரோயின்களை பார்த்திருப்பீர்கள் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் பெயர் சொல்லுங்கள் என்று இளையராஜாவிடம் ராதா கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் இளையராஜா ரொம்ப பிடித்தவர் என்று சொல்ல முடியாது ரொம்ப ரொம்ப பிடித்தது எனது இமாஜ்னேஷனில் லைலா.
நான் 3-ம் வகுப்பு படிக்கும்போது லைலா மேல் மஜ்னுவைிட அதிகமாக காதல் பண்ணவன் நான். இதற்கு காரணம் லைலா இல்லை. சி.ஆர்.சுப்புராமன் போட்ட பாடல்கள். அந்த பாடல்களை அந்த ஹீரோயின் பாடுகிறப்போ லைலா மேல் மஜ்னுவை விட காதல் வந்தது. அது அவருடைய பாடல்களினால் தான். அப்போது எனக்கு 8 வயது என்று பதில் அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil