Advertisment

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் நான் மொழிபெயர்ப்பாளர்! - தமிழ் சினிமாவின் நாய் பயிற்றுவிப்பாளர் செந்து மோகன்

Chenthu Mohan: மற்றவர்களுக்கு தான் அவை நாய்கள். ஆனால் நான் அவற்றை எனது குழந்தைகளாகவே பார்க்கிறேன் பார்க்கிறேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dog trainer Chenthu Mohan

Dog trainer Chenthu Mohan

எஸ்.சுபகீர்த்தனா

Advertisment

"உட்காரு” என செந்து மோகன் அறிவுறுத்த, அதற்கு அவரது கோரை பல் நண்பர் ஸ்கூபி கீழ்ப்படிகிறார். இதேபோல் பல நாய்கள், செந்து சொல்வதை தட்டாமல் கேட்கின்றன. ‘வா’, ‘நில்’, ‘கைகுலுக்கு’, ‘குதி’ என என்ன சொன்னாலும் அந்த நாய்கள் செய்கின்றன. செந்து தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நாய் பயிற்சியாளர்களில் ஒருவர். தனது வார்த்தைகளின் மூலம், தமிழ் சினிமாவுக்கு விலங்கு "நடிகர்களை" தயார் செய்கிறார் செந்து மோகன். குதிரைகள், நாய்கள் மற்றும் பறவைகளையும் அவர் பயிற்றுவிக்கிறார். “எந்த மிருகத்துடனும் நட்பு கொள்ள பொறுமை மற்றும் புலனுணர்வு தேவை. அவைகள் மகிழ்விக்கவும், சவால்களை நேசிக்கவும் ஆர்வமாக உள்ளன” எனும் செந்து புன்னகைக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, செந்து ஒரு பெட் பார்லர் மற்றும் உணவகத்தை நடத்தி வந்திருக்கிறார். “நான் எப்போதும் விலங்குகளுடன் இருக்க விரும்பினேன். என் விருப்பத்தை ஆதரிக்கும் மனைவியை பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார். சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கு ஒரு ஜெர்மன் ஷெபர்ட் நாய் தேவை என்று, தெரிந்துக் கொண்டது தான் செந்துவுக்கு ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

மேலும், ”தீரன் ஆதிகாரம் ஒன்று’ மற்றும் ’கூர்க்கா’வில் பணிபுரிந்திருக்கிறேன். விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள், ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. நான் சிறு வயதிலிருந்தே விலங்குகளை நேசித்தேன், அதனால் தான் இங்கே இருக்கிறேன்”என்கிறார் செந்து.

”ஒரு நாயைப் பயிற்றுவிக்க ஒரு மாதம் ஆகும். படப்பிடிப்பு தளத்தின் விளக்குகள் மற்றும் சத்தங்களுடன் விலங்குகளை பழக்கப்படுத்தி விட்டு”, தனது பணியைத் தொடங்குகிறார் செந்து மோகன். "நாய்களுக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான உறவு மிக நெருக்கமான நீடித்த உறவு" என்கிறார். மனிதர்களை நடத்தும் விதத்தில் நாயையும் நடத்தும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் மட்டும் பணியாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் செந்து. “திரைத்துறையில் ‘வேண்டாம்’ என்பதை எப்போது சொல்ல வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது தான் ஒரு பயிற்சியாளரின் தரம்” எனும் செந்து, இன்றைய  திரையுலகம், சி.ஜி வேலைகளின் வீழ்ந்து கிடக்கிறது. ஆனால் சில நேரங்களில் உண்மையான விலங்குக்கு மாறாக சி.ஜி செய்ய முடியாத நிலை ஏற்படும். அங்கு விலங்கின் பங்கு அவசியம்” என்கிறார்.

செந்து மோகன் தனது நாய்களுடன் ’நானோ’ காரில் பயணம் செய்கிறார். “மற்றவர்களுக்கு தான் அவை நாய்கள். ஆனால் நான் அவற்றை எனது குழந்தைகளாகவே பார்க்கிறேன் பார்க்கிறேன்” என்கிறார். ”முதலில், நான் அவர்களுக்கு நன்னடத்தையை கற்பிக்கிறேன். ஸ்கிரிப்டைப் படித்த பிறகு, குறிப்பிட்ட காட்சிகளுக்கு ஏற்றவாறு நாய்களைப் பயிற்றுவிக்கிறேன். அப்போது முழு ஸ்கிரிப்ட்டும் எனக்குத் தெரியும் என்பதை மீண்டும் உறுதி செய்துக் கொள்கிறேன். அதனால் எனது செல்லப்பிராணிகளின் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். எல்லா நாய்களுக்கும் அடிப்படையான பயிற்சிகளை அளிக்க முடியும், ஆனால் அதையும் மீறி, இது உளவியல் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு படத்தில் ஒரு நாயைச் சேர்ப்பது, அனுதாபத்தைப் பெறுவதற்கும், கவனத்தை ஈர்ப்பதற்கும் வழிவகுப்பதோடு, ஆடியன்ஸிடம் நல்ல ஒர்க் அவுட்டும் ஆகிறது” என்கிறார்.

மேலும் இதனை ஆங்கிலத்தில் படிக்க Lights, camera, action, bark

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment