Advertisment

மீண்டும் இணைந்த சிம்பு-ஹன்ஸிகா: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இது இருவரின் ரசிகர்களுக்கும் விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
simbu hansika reunited for maha

நடிகர் சிம்புவும் நடிகை ஹன்ஸிகாவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்தனர்.

Advertisment

ஆனால் கருத்து வேறுபாடுகளால் பிரிந்துவிட்டனர். இருப்பினும் இயக்குநர் விஜய் சந்தரின் ‘வாலு’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மஹா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இதன் படத்தின் படபிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகிறது.

அறிமுக இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் இயக்கும் இந்தப் படத்தில் முன்னணி கேரக்டரில் ஹன்ஸிகாவும், நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் சிம்புவும் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஹன்ஸிகாவுடன் இணைந்து, சிம்பு ஆட்டம் போட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது ’மஹா’ படபிடிப்பில் இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது இருவரின் ரசிகர்களுக்கும் விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

 

Tamil Cinema Hansika Motwani Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment