பாலிவுட் ஷ்டார் ஷாருக்கான நடிப்பில் பெரிய வசூல் வேட்டை நடத்தி வரும் பதான் படத்தின் சிறப்பு காட்சி நடிகரும அரசியல்வாதியுமான கமல்ஹாசனுககாக திரையிடப்பட்டுள்ளது.
பாலிவுட் திரைப்படத்தின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பின் வெளியான படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பதான், இதுவரை 15 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.875 கோடி வசூலித்துள்ளது. மேலும் இப்படம் விரைவில் ரூ.900 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதான் படத்தின் வெற்றி பாலிவுட் சினிமாவின் மார்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. இதனால் பதான் படம் தற்போது பாலிவுட்டின் அடையாளமாக மாறியுள்ள நிலையில், இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும் இந்த படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பதான் படத்தின் சிறப்பு காட்சி நடிகர் கமல்ஹாசனுக்காக சென்னையில் திரையிடப்பட்டது.
புதன்கிழமை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு காட்சியில், உலக நாயகன் கமல்ஹாசனுடன், பழைய ஹீரோயின்கள் ஜெயஸ்ரீ, ஷோபனா மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் பதான் படத்தை கண்டு ரசித்தனர். தமிழில் விடிஞ்சா கல்யாணம் மற்றும் திருமதி ஒரு வெகுமதி பட்களில் நடித்த நடிகை ஜெயஸ்ரீ பதாக் படம் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதில் “நான் மீண்டும் பதான் படத்தைப் பார்த்தேன்! ஆனால் இந்த முறை படம் பார்க்க எனக்கு அழைப்பு வந்தது. ‘விக்ரம்’ மற்றும் ‘விஸ்வரூபம்’ வரிசைப் படங்களின் மூலம் கோலிவுட்டுக்கு இந்த வகை ஆக்ஷன் படங்களைக் கொண்டு வந்த சிறப்பு சொந்தக்காரரான கமல்ஹாசனுடன் இந்த சிறப்புக் காட்சிக்கு வந்தது தனி சிறப்பு. சிறப்பான நடிகர்கள், நடிப்பு மற்றும் பொழுதுபோக்கு கதை. அதனால்தான் டிம்பிள் கபாடியா பதான் படத்தில் நடித்திருக்கலாம் என்று கூட நினைத்தேன்!
இப்போது வரும் பல படங்களுக்கு பதான் விதிவிலக்காக உள்ளது. குடும்ப இணைப்பு என் அம்மாவின் மூத்த சகோதரி பிரேமா மற்றும் கமலின் (சார்) அக்கா நளினி இருவரும் பள்ளியில் நெருங்கிய நண்பர்களாக இருந்து தொடங்குகிறது. சுஹாசினி மற்றும் அவரது சகோதரி நந்தினியுடன் அவரது மருமகள்களுடன், நாங்கள் அவருடன் இந்த இடைவெளிக்கு முன்னும் பின்னும் உரையாடினோம். அவர் என் அத்தையை நினைவு கூர்ந்தார், அவளுக்கு அவர் வைத்திருந்த நகைச்சுவையான புனைப்பெயர்கள் மற்றும் அந்த நாட்களின் பல நினைவுகளை அன்புடன் நினைவுபடுத்தினார்.
நான் அவர் மீது மிகுந்த மரியாதையையும், புகழையும் உணர்ந்தேன், முழு வட்டத்திற்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. கலைமாமணி பத்மஸ்ரீ பத்மபூஷன் செவாலியர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கிறேன். பதான் படத்தில் கமல் தனி ஆர்வம் காட்டியுள்ளார். படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக ஓடத் தொடங்கியபோது, ஷாருக்கிற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார். அவர் எழுதினார்,
பதானைப் பற்றி பெரிய செய்திகளைக் கேட்கிறேன். கமல் தனது முஸ்லீம் நண்பரான அம்ஜத் அலி கானாக ஷாருக்கானைக் காட்டிய ஹே ராம் படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். மேலும் ஹே ராம் படத்தில் நடித்ததற்காக ஷாருக் பணம் வாங்க மறுத்ததை கமல் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/