பிக்பாஸ் வீடு… சிகரெட்… இளம் நடிகை..! அதிர்ச்சிப் பக்கத்தை அம்பலப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஸ்மோக்கிங் ரூம். இதில் போட்டியாளர்களுக்கு சிகரெட் பாக்கெட் பாக்கெட்டகாக கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் பிரபலமான பிக்பாஷ் ஷோ கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டில் இருந்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். முதன் முதலாக ஹிந்தியில் நடத்தப்பட்ட இந்த ஷோ கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் நடத்தப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த ஷோ, சில சர்ச்சையான நிகழ்வுகளும் நடப்பதுண்டு.

இதில் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் நிகழ்வு, ஸ்மோக்கிங் ரூம். இதில் போட்டியாளர்களுக்கு சிகரெட் பாக்கெட் பாக்கெட்டகாக கொடுக்கப்படும். ஆனால் தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது போட்டியாளர்கள் புகை பிடிக்கும் காட்சிகள் காட்டப்படவில்லை என்றாலும், ஸ்மோகிங் அறைக்குள் சிகரெட் டப்பாக்கள் சிதறிக்கிடப்படதை பார்த்திருக்கலாம். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியால் இளம் நடிகைக்கு ஏற்பட்டுள்ள புகை பிடிக்கும் பழக்கம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அதிர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளர்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம்பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள். அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, “தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்கம் போயி.. ” என்று கையில் பக்க்கம் சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.

நான் “ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.. feel free” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் “Soooooory..” என்று நெளிந்தாள். “எதுக்கு?” என்றேன். “உங்களுக்கு ஷாக்தானே?” “Shock இல்ல.. bit surprised. Didn’t know that you smoke” என்றேன்.”எல்லாம் இந்த Bigg Boss-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா?” என்றாள்.” அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டேன்.

”ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும்””இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல?””நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது” என்றாள் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema music james vasanthan say about bigboss show

Next Story
அடடா நம்ம லாஸ்லியாவா இது! வித்தியாச உடைகளில் ஸ்டைலிஷ் போட்டோஷூட்!Bigg Boss Losliya different Photoshoot Photos Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com