Advertisment

அஜித்துடன் நடிக்க மறுக்கும் நயன்தாரா... சர்தார் இயக்குனர் படத்தில் கே.ஜி.எஃப் யஷ்... டாப் 5 சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் துணிவு படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்தார்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
அஜித்துடன் நடிக்க மறுக்கும் நயன்தாரா... சர்தார் இயக்குனர் படத்தில் கே.ஜி.எஃப் யஷ்... டாப் 5 சினிமா

லால் சலாம் படத்திற்கு ரஜனிகாந்த் சம்பளம்

Advertisment

தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜனிகாந்த் அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார். விக்ராந்த் விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். இதற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினிகாந்த் அதற்காக 25 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அஜித் மீது கோபத்தில் நயன்தாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் துணிவு படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்க்கு திருப்திகரமாக இல்லாத நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை வெளியேற்றியது. அதனைத் தொடர்ந்து அஜித் 62 படத்தை இயக்க இயக்குனர் மகிழ் திருமேனி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனது கணவர் விக்கேஷ் சிவன் இயக்கும் படத்தை கைவிட்ட அஜித் மீது நயன்தாரா கோபத்தில் உள்ளதாகவும் இனிமேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளத்தை உயர்த்திய ஆர்.ஜே.பாலாஜி

தொடக்கத்தில சிறு சிறு வேடங்களில் நடித்து விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் என்ற படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்தவர் ஆர்,ஜே.பாலாஜி அதன்பிறகு எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேஷம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ரன் பேபி ரன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படங்களின் தொடர் வெற்றியின் காரணமாக ஆர்.ஜே.பாலாஜி தனது சம்பளத்தை 4 கோடியில் இருந்து 7 கோடியாக மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

சர்தார் இயக்குனர் படத்தில் கே.ஜி.எஃப் யஷ்

இரும்புத்திரை சர்தார் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பி.எஸ் மித்ரன் அடுத்து இயக்கும் படம் தொடர்பான தகவல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்ததாக இவர் இயக்கும் படத்தில் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன் சொன்ன கதையை கேட்டு இம்ரஸ ஆன யஷ் கண்டிப்பாக இந்த படத்தை பண்ணலாம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டாடா படம் காப்பியா?

பிக்பாஸ் கவின் அபர்னா தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் டாடா. நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இப்படம் தற்போது காப்பி என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான சித்திரம் படம் தான் தமிழில் டாடா என்று படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment