Advertisment

பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

Power Star Seenivasan In Hospital : தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

Tamil Cinema Actor Power Star Seenivasan : தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நீதானா அவன், மண்டபம், உனக்காக ஒரு கவிதை, இந்திர சேனா ஆகிய படங்களில் நடித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா என்ற படத்தை தயாரித்த நாயகனாக நடித்த இவர், அதன்பிறகு கண்ணா லட்டு திண்ண ஆசையா, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.

Advertisment

இந்நிலையில் தற்போது பவர்ஸ்டார் சீனிவாசன் (59) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதம், இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவரான பவர்ஸ்டார் சீனிவாசனும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சென்னையில் ஒரு மருத்துவமனை நிர்வாகித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது ​​ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பவர்ஸ்டார் சீனிவாசன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கே.எஸ்.மணிகண்டன் இயக்கிய கண்ணா லட்டு திண்ண ஆசையாப படத்தில், சேதுராமன் மற்றும் சந்தனம் ஆகியோருடன் இணைந்து நடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், இப்படத்தில் சேதுராமன் மற்றும் சந்தனம் ஆகியோரின் நண்பராக நடித்து அவர்  செய்த நகைச்சுவை ரசிகர்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Actor Powerstar Seenivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment