Advertisment

மதுரை வாசனையே இல்லை: Netflix-ல் மணக்காத மீனாட்சி சுந்தரேஸ்வரர்

twitter reaction on Netflix india’s Meenakshi Sundareshwar Tamil News: 'நெட்ஃபிக்ஸ் இந்தியா' இதுவரை வெளியிட்ட படங்களிலேயே 'சூர மொக்கையான படம் இது' என மீனாட்சி சுந்தரேஸ்வரர் படத்தை இணைய வாசிகள் கழுவி ஊற்றுகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Tamil cinema news in tamil: netizen’s on Meenakshi Sundareshwar in social media

 Meenakshi Sundareshwar movie review in tamil: பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகர் தயாரித்து 'நெட்ஃபிக்ஸ் இந்தியா' வெளியிட்டுள்ள படம் மீனாட்சி சுந்தரேஸ்வரர். கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குநர் விவேக் சோனி இயக்கியுள்ளார். சன்யா மல்ஹோத்ரா மற்றும் அபிமன்யு தசானி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

Advertisment
publive-image

'என்னதான் திருக்கல்யாணமாக இருந்தாலும் பிரச்னை இல்லாமல் இருக்காது' என்ற ஒன் லைனில் உருவாக்கப்பட்ட படம் தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர். இந்த படத்தில் எதார்த்தமாக ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த திருமணத்திற்கு பிறகு, அடுத்தடுத்து வரும் பிரச்னைகளை தம்பதிகள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் பட மைய கதையும் முழுக்கதையும்.

publive-image

இந்திப் படமாக வெளிவந்துள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரில் மீனாட்சியாக வரும் சன்யா மல்ஹோத்ரா BBA படித்தவர். சுந்தரேஷவர்(அபிமன்யு தசானி) இன்ஜினியரிங் முடித்து விட்டு அப்பாவின் சேலைக் கடையில் வேலை பார்க்க பிடிக்கமால் ஐடி-யில் வேலை தேடுபவர். இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெறுகிறது. திருமத்திற்கு பிறகு உருவாகும் சிக்கல்கள், அதை எப்படி இந்த தம்பதியினர் சமாளிக்கின்றனர்? பொய்கள், புகுந்த வீட்டுக் கொடுமைகள்? என கதை சின்னத்திரை அளவிற்கு நீளுகிறது.

publive-image

தற்போது நெட்ஃபிக்ஸில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், 'நெட்ஃபிக்ஸ் இந்தியா' இதுவரை வெளியிட்ட படங்களிலேயே 'சூர மொக்கையான படம் இது' எனவும், 'கதை மதுரையில் நடக்கிறது என்கிறார்கள் மதுரை வாசனையே படத்தில் இல்லை' எனவும் இணைய வாசிகள் கழுவி ஊற்றுகிறார்கள்.

publive-image

என்னடா மதுரக்காருன்னுக்கு வந்த சோதனை என்கிற அளவில் படத்தில் மொத்தமே 20 தமிழ் வார்த்தைகள் தான் பேசுகிறார்கள். படம் வேறு சின்னத்திரை பாணியில் நகர்வதால் இதற்கு சின்னத்திரை சித்திரம் என பெயரிடலாம் என்றும் ஒரு இணையவாசி குறிப்பிட்டுள்ளார்.

publive-image

ரஜினியையும், பில்டர் காப்பியையும், தினமும் பட்டு சட்டை அணியும் முகங்களைக் கடந்து ஒரு தமிழகம் இருக்கிறது என்ற அதிருப்தியை டிவீட்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் சில இணைய வாசிகள். 'தலைவா தலைவா' என நீங்கள் உச்சி முகர்வதாலேயே ஒரு படம் தமிழ்ப்படமாக மாறிவிடாது என்றும், 'மீனாட்சி சுந்தரேஷவர்' எனும் பெயரைத் தவிர படத்தில் எதுவும் தமிழ் இல்லை என்றும் மற்றும் சில இணைய வாசிகள் தெரிவித்துள்ளனர்.

publive-image

தமிழரின் கலாச்சாரம், பண்பாடு, மொழி என அனைத்தையும் கேலி கூத்தாடியுள்ள இந்த படத்திற்கும், படக்குழுவுக்கும் எதிராக சமூக வலைதள பக்கங்களில் குரல்கள் வலுத்து வருகிறது. மேலும், இந்த படத்தை ட்விட்டரில் உள்ள தமிழ் மக்கள் பார்த்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்க வேண்டும் என ஒரு இணைய வாசி ட்வீட் செய்துள்ளார்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Tamil Movie Review Cinema Update Hindi Tamil Cinema News Netflix India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment