/indian-express-tamil/media/media_files/2025/10/18/the-teacher-amala-paul-2025-10-18-07-33-39.jpg)
பண்டிகை நாட்கள் மட்டும் இல்லாமல் வாந்தோறும் திரையரங்குளில் வெளியாகும் படங்களை விடவும், ஒடிடி தளஙகளில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் 4 அல்லது 8 வாரத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகிவிடும் என்பது தான்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பைசன், டீசல், டியூட் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒடிடி தளங்களில் பல படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இதில், கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களாக உள்ளன. இந்த மாதிரியான படங்கள் எப்போது வெளியானாலும், வெளியாகி சில வருடங்கள் கடந்தாலும், அதற்கான வரவேற்பு என்றும் குறைவதே இல்லை. அந்த வரிசையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு க்ரைம் த்ரில்லர் படம் இன்றும் ரசிகர்களை கட்டிப்போடும் ஒரு படமாக நிலைத்திருக்கிறது.இந்த படத்தின் பெயர் தி டீச்சர்.
கடந்த 2022-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்த படத்தில், அமலா பால் நாயகியாக நடித்திருந்தார். விவேக் இயக்கிய இந்த படம் ஒரு மணி நேரம் 55 நிமிடங்கள் ரன்னிங் டைம். இந்தப் படம், க்ரைம் திரில்லர் திரைப்பட ரசிகர்களை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வரும் படமாக இருக்கிறது. தேவிகா (அமலா பால்) என்ற ஆசிரியை பள்ளியில் நான்கு மாணவர்களால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். இதனால் அவரது கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது. தனக்க நடந்த இந்த கொடுமையை தேவிகா தனது கணவரிடம் கூறும்போது, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், அவரது மாமியார் அவருக்கு ஆதரவாக நிற்கிறார்.
இதன் பிறகு காவல்துறையின் உதவியின்றி அந்த நான்கு மாணவர்களையும் தேவிகா எப்படி கண்டுபிடித்து பழிவாங்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் மீதிக் கதை. ஐஎம்டிபி-யில் 6.8 மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த படம் தற்போது தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. படத்தில் அமலா பாலுடன் ஹக்கிம் ஷா, செம்பொன் வினோத், மஞ்சு பிள்ளை, ஐ.எம்.விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பஹத் பாசில் நடிப்பில் அதிரன் படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அடுத்து இயக்கிய படம் தான் இந்த தி டீச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us