Advertisment

படம் ரிலீஸாகி 3 நாட்களுக்கு பிறகே விமர்சனம் எழுத வேண்டும் –தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

படம் ரிலீஸாகி 3 நாட்களுக்கு பிறகே விமர்சனம் எழுத வேண்டும்; திரையரங்குகளில் படம் பார்த்தபின் கருத்து கேட்பதற்காக கேமராக்களை திரையரங்குகளுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம் –தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

author-image
WebDesk
New Update
படம் ரிலீஸாகி 3 நாட்களுக்கு பிறகே விமர்சனம் எழுத வேண்டும் –தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

படம் ரிலீஸ் ஆகி 3 நாட்களுக்கு பின்னரே, படத்தைப் பற்றிய விமர்சனம் எழுதவேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Advertisment

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. சங்கத் தலைவர் என்.ராமசாமி துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படியுங்கள்: சென்னையில் சினிமா நடிகை தற்கொலை.. காதல் தோல்வி காரணமா?

அதில் முக்கியமானதாக, திரைப்பட விமர்சனங்களை, அதன் வெளியீட்டு தேதியில் இருந்து மூன்று நாட்கள் கழித்து வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியான தேதியிலிருந்து மூன்று நாட்கள் கழித்து, சமூக வலைதளங்களில் அதன் விமர்சனங்களை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தீர்மானம் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படம் வெளியானது முதல் நொடிக்கு நொடி விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பல திரைப்படங்கள் வணிக ரீதியாக படுதோல்வி அடைகிறது என கருத்து நிலவி வருகிறது.

மேலும், திரைப்படங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாவதால்,ஞாயிற்றுகிழமைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியானால், அது படத்தின் வசூலை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே, தான் மூன்று நாட்களுக்கு பின் விமர்சனங்களை வெளியிட தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

அடுத்ததாக, திரையரங்குகளில் படம் பார்த்தபின் கருத்து கேட்பதற்காக கேமராக்களை திரையரங்குகளுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், திரைப்படங்களையும், நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறாக செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு எந்தப் பேட்டியும் தருவதைத் திரைத்துறையினர் தவிர்க்குமாறு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் டிக்கெட்டுகளை சென்டர்லைஸ் சர்வர் மூலம் மானிட்ரிங் செய்து டிக்கெட் விற்பனை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

சிறுமுதலீட்டு திரைப்படங்களை நமது சங்கத்தின் வர்த்தக அறக்கட்டளை மூலம் OTT தளத்தில் வெளியீட்டு தயாரிப்பாளர்கள் பயனடையும் வண்ணம் வழிவகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment