Tamil Cinema Actor Rajinikanth 169th Movie Title Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 169-வது படத்தின் டைட்டில் ஜெயிலர் என்று சன்பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரிய கேள்வி எழுந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவார் என்றும் சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
கோலமாவு கோகிலா என்ற சுமாரான வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் நெல்சன் காம்போவில் வெளியான பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்து. அதுமட்டுமல்லாமல் படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக் உள்ளது என்று கூறி நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனங்களை தொடுத்தனர். பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினி படத்தின் வாய்ப்பு நெல்சன் கையை விட்டு நழுவியதாக கூறப்பட்டது.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/tEtqJrvE1c
— Sun Pictures (@sunpictures) June 17, 2022
இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் எழுதுவார் என்று தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், தற்போது ரஜினிகாந்த் 169 படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
பீஸ்ட் நஷ்டத்த சரி கட்ட ஜெயிலர் தான் வரனும் ..
— Rᴅx_Sᴜɴᴅᴀʀツ🔥™ (@Itz_Rdx3) June 17, 2022
நெல்சன் படம் இப்படி தான் ரத்தம் சொட்டுற மாதிரி கத்தி தொங்கும்.
— விழி தமிழா! (@Vili_Thamila) June 17, 2022
கடைசில படம் பாத்தா Tomato Sauce வழியும்.😀
#Jailer 🥰🤩💔💔🥰😍🔥❤🔥🔥😘😘🥰😍🥰
— ▄︻デ𝘼𝙍𝙅.𝙈══━ (@aravindarajm005) June 17, 2022
Thalaivaroda weaponaa pathalae fire yeruthudaaaa…. @rajinikanth pic.twitter.com/jFsKUGOihe
சூர்யா தூக்கி போட்ட கத்திய தூக்கிட்டு வந்துட்டிங்களாடா°?
— Shanthakumar🇮🇳 (@isanthakumar) June 17, 2022
உண்மையிலே டைட்டில் செம மாஸா இருக்கு…! டைட்டிலுக்கு ஏத்த மாதிரி தான் திரைக்கதையும் பயங்கரமா இருக்கும்னு நினைக்குறேன்.#Beast-ல நெல்சன் தடுமாறியிருக்கலாம் – #Jailer-ல கெத்தா திரும்பு வருவாரு.
— Satheesh (@Satheesh_2017) June 17, 2022
தலைவருக்கும் சரி,
நெலசனுக்கும் சரி
இந்த படம் திருப்புமுனையா அமையும் 💪🔥
சன்பிச்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை ஜெயிலர் என்ற டைட்டிலுடன் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு திரைக்கதை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் எழுதுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் படத்தில் ஒரு நடிகராக மட்டுமே உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஃபர்ஸ்லுக் போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த படம் 2023-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபபடுகிறது. ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்காக ஒரு பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்தே நிதர்சனமாக உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”