Advertisment

ராட்சசன் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

மரகத நாணயம் மற்றும் ராட்சசன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லிபாபு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

author-image
WebDesk
New Update
Delli Babu

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி உரிமையாளராக தமிழ் சினிமாவில் த்ரில்லர் ஹிட் படங்களில் ஒன்றாக ராட்சசன் படத்தின் தயாரிப்பாளருமான டில்லி பாபு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் பிலிம் பேக்டரி. இந்நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான, டில்லி பாபு, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான உறுமீன் என்ற படத்தை வெளியிட்டார். பாபி சிம்ஹா, கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம் ஓரளவு வரவேற்பினை பெற்றிருந்துது.

அதனைத் தொடர்ந்து ஆதி நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் மரகத நாணயம், விஷ்ணு விஷால் அமலாபால் நடிப்பில் ராட்சசன், அருள்நிதி நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள், சமீபத்தில் வெளியான கள்வன் உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தவர் டில்லி பாபு. இதில் மரகத நாணயம், ராட்சசன் ஆகிய இரண்டு படங்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தனது மகனின் நடிப்பில் வளையம் என்ற படத்தை தயாரித்திருக்கும் டில்லி பாபு, உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இவர், புதுமுக மற்றும் இளம் இயக்குனர்களுக்கு முன்பணம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் டில்லி பாபு மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment