Advertisment

துல்கர் சல்மான் பட அப்டேட்.. ஹன்சிகாவின் படத்தை தயாரிக்கும் இயக்குநர்.. மேலும் சினிமா செய்திகள்

இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
துல்கர் சல்மான் பட அப்டேட்.. ஹன்சிகாவின் படத்தை தயாரிக்கும் இயக்குநர்.. மேலும் சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'ஹே சினாமிகா' திரைப்படத்தின் புதிய அப்டேட்டை அந்தப் படத்தின் இயக்குநர் பிருந்தா வெளியிட்டுள்ளார்.

Advertisment

நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குநராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது

 இந்த திரைப்படம் பிப்ரவரி 25-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 16-ந்தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார். 

ஹன்சிகா நடிக்கும் படத்தை தொடங்கி வைத்த பிரபல நடிகர்

ஸ்கெட்ச், சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார்.

பிலிம் வொர்க்ஸ் நிறுவனம் என்ற பெயரில் இவர் தயாரிக்கும் அந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.

இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த படத்தின் முதல் காட்சியை கே.எஸ். ரவிகுமார் இயக்க, கலைப்புலி எஸ். தாணு கேமராவை இயக்க, நடிகர் விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப்,  ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சபரி கிரீசன், சரவணன் ஆகியோர் இயக்குகிறார்கள்.

தீபாவளிக்கு வெளியாகும் இளம் நடிகரின் படம்

பாய்ஸ் காதலில் விழுந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த நகுல் தற்போது 'வாஸ்கோட காமா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், முனீஸ்காந்த் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வாஸ்கோட காமா திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர நகுல், படம் 2022 தீபாவளி அன்று வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

அக்ஷய் குமாரின் மிரட்டலான தோற்றம்

பெல்பாட்டம், லக்ஷமி, ஹவுஸ்ஃபுல் 4, 2.0 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

இவர் நடிப்பில் வெளியான குட் நியூஸ் படம் பரவலான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அவர் பச்சான் பாண்டே என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது கதாபாத்திர புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்தார்.

அதில் மிரட்டலாக தோற்றத்தில் அவர் மிடுக்காக இருக்கிறார்.

இந்தப் படம் தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி பாபி சிம்ஹா, சித்தார்த், லஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் தயாரான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்.

அக்ஷய் குமார், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் வரும் 18-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஃபர்ஹத் சம்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கீர்த்தி சனோன், பாபி தியோல், அர்ஷத் வர்ஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

சாதனை படைத்த விஜய் படத்தின் அரபிக் குத்து பாடல்

விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் தயாராகிவரும் படம் பீஸ்ட். டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் காதலர் தினத்தையொட்டி நேற்று யூ-டியூப் தளத்தில் வெளியானது.

இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ஜோனிடா காந்தியுடன் இணைந்து இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் வெளியாகி ஒரே நாளில் 2 கோடி முறை யூ-டியூப் தளத்தில் பார்க்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது.

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சலிக்கவே மாட்டேங்குது இந்தப் பாட்டு, விஜய் சார் டான்ஸ் சூப்பர் என்றெல்லாம் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Bollywood Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment