scorecardresearch

ரகசியமாக நடந்த தளபதி 67 பட பூஜை : போட்டோ எங்கே? ரசிகர்கள் சோகம்

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

ரகசியமாக நடந்த தளபதி 67 பட பூஜை : போட்டோ எங்கே? ரசிகர்கள் சோகம்

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ள நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது.

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியாகன ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து தற்போது சிம்பு பாடியுள்ள தீ தளபதி என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள வாரிசு படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே வாரிசு படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியாக மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக தளபதி 67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்து அவ்வப்போது பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனிடையே தளபதி 67 படத்தில் பூஜை இன்று சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற இந்த பூஜையில் அங்கு செல்போன்கள் அனுமதி இல்லை என்பதால் பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விக்ரம் படத்திற்கு டைட்டில் டீசர் வெளியிட்டு அசத்திய லோகேஷ் கனராஜ் தளபதி 67 படத்திற்கும் டீசர் வெளியிட உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பிற்காக பிரசாத் லேபில் 2 செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அடுத்து 4 நாட்களுக்கு இந்த டீசர் தொடர்பான படப்பிடிப்பு நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் படத்தின் எந்த அறிவிப்பாக இருந்தாலும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில், தளபதி 67 குறித்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளியாகாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema thalapathy 67 vijay lokesh kanagaraj movie update in tamil

Best of Express