Advertisment

உதயநிதி படத்தில் தமிழுக்கு ரீ எண்ட்ரியாகும் பூமிகா!

‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூமிகா. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bhumika Chawla

நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா.

Advertisment

அதன் பிறகு அவர் நடித்த ‘ரோஜா கூட்டம்’ படமும் சூப்பர் ஹிட்டானது. ’ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் முதல் பாதியில் பவ்யமாகவும், இரண்டாம் பாதியில் அதிரடியாகவும் வித்தியாசம் காட்டியிருப்பார்.

நிறைய தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் திருமணத்திற்குப் பிறகு, தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் சமந்தா நடித்திருந்த ‘யூ டர்ன்’ படத்தில் நடித்திருந்த பூமிகா, தற்போது தமிழுக்கும் ரீ எண்ட்ரியாகிறார்.

இயக்குநர் மு.மாறனின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூமிகா.

ஏற்கனவே படபிடிப்பில் கலந்துக் கொண்டு தன்னுடைய போர்ஷனுக்கான ஷூட்டிங்கை 10 நாட்கள் முடித்து விட்டாராம். ’கண்ணை நம்பாதே’ படக் குழுவினரும் 50 சதவீத படபிடிப்பை நிறைவு செய்து விட்டார்களாம்.

தவிர, நயன்தாரா நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்திலும் பூமிகா நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

Tamil Cinema Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment