சினிமாவில் யூனிவர்ஸ் இப்போது பாப்புலராக இருந்தாலும் 36 வருடங்களுக்கு முன்பே இதை நாங்கள் செய்துவிட்டோம் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளர்.
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. போதை பொருள் கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஒரு உளவாளி சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படமான கைதி படத்தை இணைத்து திரைக்கதை அமைத்திருந்தார்.
யூனிவர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பாணியிலான படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விக்ரம் படம் புதுவித அனுபவத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். கைதி படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் பிஜாய் (நரேன்) விக்ரம் படத்தில் அதே கேரக்டரில் விக்ரம் (கமல்ஹாசன்) குழுவில் ஒருவராக வருவார்.
அதேபோல் விக்ரம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கேரக்டர் முன்பு கைதி படத்தில் வில்லன் அடைக்கலம் மற்றும் அவரது ஆட்கள் தங்களது பாஸ் ரோலக்ஸிடம் போதை பொருள் காணாமல் போனது குறித்து பேசுவார்கள். அத்துடன் படம் முடிந்துவிடும். இதனால் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதி 2-ம் பாகம் இயக்கினால் அதில் விக்ரம் ரெப்ரன்ஸ் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், லோகேஷ் தற்போது இயக்கி வரும் விஜயின் லியோ படத்தில் விக்ரம் அல்லது ரோலக்ஸ் கேரக்டரில் ரெப்ரன்ஸ் இருக்குமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். விக்ரம் படத்தில் கைதி படத்தின் யூனிவர்ஸ் வந்ததே இதற்கு முக்கிய காரணம்.
ஆனால் தமிழ் சினிமாவில் யூனிவர்ஸ் வருவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தின் ஜெய் கேரக்டர் வந்து போகும். அதேபோல் 1990-ம் ஆண்டு வெளியான அதிசய பிறவி படத்தில், ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களின் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட கடைசி சினிமா நிகழ்ச்சி ஜல்லிக்கட்டு படத்தின் வெற்றி விழா. 1987-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனது குடும்பத்தை அழைத்தவர்களை பழிவாங்கும் கதை.
சிவாஜி கணேசன் சத்யராஜ், ராதா பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த ஜல்லிக்கட்டு படத்தில் சரத்யராஜ் மாறுவேடத்தில் வென்று வில்லன்களை கொலை செய்வார். இந்த மாறுவேடத்தில் அவர், இதற்கு முன்பு நடித்த படங்களின் கெட்டப்பில் தான் வருகிறார். இதன் மூலம் 1987-லேயே தமிழ் சினிமாவில் யூனிவர்சை கொண்டு வந்தவர் சத்யராஜ். இது குறித்து தீக்குச்சி படத்தின் நேர்காணலில் சத்யராஜ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“