Advertisment

நயன்தாரா பாடலுக்கு 'நச்' நடனம் : தண்ணீரில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்

Tamil Bigboss Celebrity Shivani Narayanan : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவானி நாராயணன் நயன்தாரா பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
நயன்தாரா பாடலுக்கு 'நச்' நடனம் : தண்ணீரில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்

Tamil Cinama Update Bigboss Celebrity Shivani Narayanan Dance Video : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஷிவானி நாராயணன் தற்போது நயன்தாரா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைராலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவி சீரியலுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்புதான். அப்படித்தான் கடந்த 2016-19-ல் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் ஷிவானி நாராயணன். அதன்பிறகு சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி சீசன் 1 ஆகிய தொடர்களில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய இவர், கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர் பாலாவுடன் காதலில் விழுந்த்தாக கிசுகிசுக்கப்பட்டாலும், இந்த சர்ச்சையில் ஷிவானி லாவகமாக எஸ்கேப் ஆகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்து பார்த்தால் ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கும் பெரும் பிரபலம். தனது பக்கத்திற்கு அதிக பார்வையாளர்களை வைத்துள்ள இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் தினமும் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தார். இவரது ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்சை வாரி இரைப்பது வழக்கம். இடையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் புகைப்படம் பதிவேற்றுவதை நிறுத்திக்கொண்டார். இதனால்  ரசிகர்கள் ஷிவானி எப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருவார் என்று காத்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷிவானி புகைப்படங்கள் பதிவேற்றுவதை நிறுத்தினார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மீண்டும் புகைப்படம் எப்போது பதிவேற்றுவீர்கள் என்று கேட்க தொடங்கினர். இதனையடுத்து சில நாட்களுக்கு பிறகு ஷிவானி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணைங்க மீண்டும் தனது புகைப்படத்தை பதிவேற்ற தொடங்கினார். அந்த வகையில், தற்போது  மாலத்தீவின் சுற்றுலா சென்றுள்ள நிலையில்,  தண்ணீரில் நின்றபடி ஸ்விம்மிங் சூட், உள்ளிட்ட விதவிதமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதில் ஹைலைட்டாக நடிகை நயன்தாராவின் ஹெலன்னா பாடலுக்கு தண்ணீரில் நின்றபடி செம்ம ஸ்டைலிஷாக ஆட்டம் போட்டு, ஷிவானி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.



"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment