Advertisment

அழகு நம்மை சூழ்ந்துள்ளதா? வாத்தி நாயகியின் வசீகரமான க்ளிக்ஸ்

கிருஷ்ணா நடிப்பில் வெளியான களரி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான  சம்யுக்தா,  அதன்பிறகு ஜூலை காற்றில், எரிடா ஆகிய படங்களில் நடித்தார்.

author-image
WebDesk
New Update
Samyuktha

வாத்தி பட நடிகை சம்யுக்தா

2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். அதனைத் தொடர்ந்து தீவண்டி, லில்லி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Advertisment
publive-image

கிருஷ்ணா நடிப்பில் வெளியான களரி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான  சம்யுக்தா,  அதன்பிறகு ஜூலை காற்றில், எரிடா ஆகிய படங்களில் நடித்தார்.

publive-image

அதனைத் தொடர்ந்து மலையாள படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர், பீம்லா நாயக் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். காளிப்பேட்டா 2 என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் கால்பதித்தார்.

publive-image

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டடித்த வாத்தி என்ற படத்தின் மூலம் சம்யுக்தா மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படம் அவருக்கு தமிழ் தெலுங்கு இரண்டிலும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

publive-image

மேலும் இந்த படத்தின் ப்ரமோஷனில் தன்னை சம்யுக்தா என்று அழையுங்கள் மேனன் தேவையில்லை என்று கூறியிருந்தார். தற்போது தெலுங்கில் விருபாக்ஷா என்ற படத்தில் சம்யுக்தா நடித்து வருகிறார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதில் அவர் வெளியிடும் பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

அந்த வகையில் சமீபத்தில் சம்யுக்தா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment