Advertisment

புதிய கேரக்டரில் தனுஷ்... நடிகர் வடிவேலு அதிரடி முடிவு... டாப் 5 சினிமா

விஜய்தான் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று சூர்யவம்சம் படத்தின் 175 வது நாள் விழாவில் கூறியிருந்தேன். நான் அப்போ சொன்னது இப்போது நடந்துவிட்டது

author-image
WebDesk
New Update
புதிய கேரக்டரில் தனுஷ்... நடிகர் வடிவேலு அதிரடி முடிவு... டாப் 5 சினிமா

எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் புது கெட்டப்

Advertisment

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை துணிவு என தொடர்ந்து 3 படங்களை இயக்கியுள்ள எச்.வினோத் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் தனுஷ் முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகர்

விஜய் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், விஜய்தான் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று சூர்யவம்சம் படத்தின் 175 வது நாள் விழாவில் கூறியிருந்தேன். நான் அப்போ சொன்னது இப்போது நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

நடிகர் வடிவேலு அதிரடி முடிவு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படம் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ள வடிவேலு இனி நாயகனாக நடிகக் போவதில்லை என்றும் நாயகர்ளுடன் இணைந்து காமெடி வேடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தை சீண்டிய விஜய் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரில் டூடியோவில் இருந்து வெளியிட இது என்ன ஆமை பாட்டா ஸ்டேடியம் போட்டு கொண்டாடுவோம்டா எங்க அண்ணா பாட்ட என்று அச்சிடப்பட்டுள்ள பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசுடன் வாக்குவாதம் செய்த விஜய் ரசிகர்கள்

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 4 வருட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதால் விஜய் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இதில் நேற்று மாலை நிகழ்ச்சி தொடங்கும்முன்னே நேரு ஸ்டேடியத்தில் ரசிகர்கள் குவிந்து ஆராவாரம் செய்தனர். இதில் கூட்ட நெரிசலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment