விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு குறித்து நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது மோதலை தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர்கள் விஜய் அஜித். இவர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். அதிலும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் மகிழ்ச்சியுடன் சேர்த்து மோதலும் வெடிக்கும்.
அந்த வகையில் 9 வருடங்களுக்கு பிறகு விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருதரப்பு ரசிகர்களும் தங்களது நடிகர்களின் படங்களை ப்ரமோட் செய்யும் பணியை தொடங்கிவிட்டனர்.
இதனிடையே கடந்த டிசம்பர் 31-ந் தேதி துணிவு டிரெய்லரும், ஜனவரி 4-ந் தேதி (நேற்று) வாரிசு படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலுமை் கடந்த ஒருமாத காலமாக இரு படங்களில் டிக்கெட் முன்பதிவு வெளிநாட்டு விநியோகம் உள்ளிட்ட பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் அஜித் நடித்துள்ள துணிவு படம் ஒரு நாள் முன்னதாக ஜனவரி 11-ந் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் வாரிசு படக்குழுவும் படத்தை ஜனவரி 11-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். முதலில் இரு படங்களும் ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் துணிவு ஒருநாள் முந்தி செல்வதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதே வழியில் வாரிசும் ஒருநாள் முன்னதாக வருகிறது.
துணிவு வாரிசு படக்குழுக்களின் இந்த அறிவிப்பு விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் மோதலுக்கு வழி வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் படங்கள் சில வருடங்களாக ஒரே நாளில் மோதாமல் இருந்தபோதும், ரசிகர் சண்டைகள் எப்போதும் ஒரு பரபரப்பான நிலையை எடுக்கும். ஆனால் தற்போது இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று கூறிவிட்டு தற்போது ஒருநாள் முன்னதாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களின் பார்வையில் மோதல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்த கடைசி நிமிட தேதி மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும் வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த மாற்றங்கள், விநியோகஸ்தர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அதே சமயம் 11ம் தேதி திரையரங்குகளுக்கு அருகில் எந்த ஒரு கொண்டாட்டமும் நடத்தக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகும் திரையரங்குகளுக்கு அருகில் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“