லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. 17 நாட்களுக்கு பிறகு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம்மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். காஷ்மீரில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த லியோ படக்குழு அடுத்ததாக சென்னையில் முகாமிட்டுள்ளது.
சென்னையில் 17 நாட்கள் படப்பிடிப்பை முடித்து படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் 50 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் புதிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். .
இந்நிலையில், விஜய் தனது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லியோ படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.இதுவரை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ஒரு சிறிய டீஸர் அப்டேட் வந்துள்ளது மற்றும் காஷ்மீரில் உள்ள கோலிவுட் நட்சத்திரத்தின் சில படங்கள் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து லியோ படத்தின் ஒரு பகுதியாக இருக்கும பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பு செட்டில் இருந்தபோது விஜய்யுடன் இருக்கும் படங்களை வெளியிட்டது. லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி, காஷ்மீரில் கடினமான சூழ்நிலையில் படக்குழுவினர் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டார்.
தளபதி விஜய் ஏப்ரல் 2 அன்று இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார், இதன் மூலம் சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்த அவர், தனது முதல் பதிவில் காஷ்மீரில் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படம் 6.2 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது, மேலும் அவருக்கு தற்போது 5.7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
வேகமாக 1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகளாவிய பட்டியலில் ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்தபடியாக விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், இந்தப் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியரும் இவர்தான். இதற்கு முன்பு தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தது. தற்போது மீண்டும் லியோ படத்திற்காக இருவரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“